பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రి శ్రి- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நேர், நிரை என்பன சொற்கள் நின்றாங்கு நிற்ப இயற்கை வகையால் வரும் அசைகளாதலின் இயலசையெனப்பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரியவகையில் அமைந்தன நேர்பு, நிரைபு என்பனவாதலின் அவை உரியசையெனப்பட்டன. இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் நேர், நிரை என்னும் இயலசையுடன் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளையும் கூட்டி அசைவகை நான்கென்றாராகப் பின்வந்த யாப்பிலக்கண ஆசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளைத் தனியசைகளாகக் கொள்ளாது அவற்றை நேர்நேர், நிரைநேர் என ஈரசைச் சீர்களுள் அடக்கி நேர், நிரை என இரண்டசைகளையே கொள்வாராயினர். 'குற்றிய லுகரமும் அற்றென மொழிப’ (புணரியல் 3) என்ற நூற்பாவில் ஒற்றுப்போன்று புள்ளிபெறும் எனப்பட்ட குற்றியலுகரம், தன்னால் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரைமாத்திரையுடையதாய் நின்றதேனும் மெய்யெழுத்தினைப்போன்று ஒடுங்கியொலியாது அகன்றொலிக்கும். அதனால் அவ் வுகரத்தை ஒற்றென அடக்கி மெய்யெழுத்தினைப்போன்று லகுபெறாது என விலக்குதல் பொருந்தாது. இனி, குற்றிய. லுகரமாகிய அஃது ஒருமாத்திரையளவாய் விரிந்திசைக்காமை யின் அதனை உயிர்த்திறமுடைய குற்றெழுத்தெனக் கொண்டு அலகு கொள்ளுதலும் ஏற்புடையதன்று. இங்ங்ணம் ஒற்றெனவும் தள்ளப்படாது உயிர் எனவும் எண்ணப்படாது இடைநிகர்த்ததாயுள்ள இக்குற்றியலுகரத்தைக் கொண்டு வேறோர் அசையாக்கு தலே செய்யத்தகுவது எனத் துணிந்த பண்டைத் தமிழியல் நூலோர் இவ்வுகரத்தினைக் கருவியாகக் கொண்டு நேர்பு, நிரைபு என்னும் இருவகை உரியசைகளை வகுத்துரைத்தனர். வண்டு வண்டு வண்டு வண்டு எனக் குற்றுகரம் நின்ற வழிப்பிறந்த அகவ லோசை, மின் னு மின்னு மின்னு மின்னு’ என முற்றுகரம் ஈறாய் நின்ற வழியும் பெறப்படுதலானும், வெண்பாவின் ஈற்றடி வண்டு’ எனக் குற்றுகர வீறாக நின்றுழியும் கோலு என முற்றுகர் வீறாக நின்று.ழியும் ஒத்த ஓசையவாமாகலானும், குற்றுகரம் மொழியீற்றினைச் சார்பாகக் கொண்டு தோன்றுமாறுபோல உரியசைக்குறுப்பாகிய முற்றுகரமும் வருமொழி காரணமாகத் தோன்றுதலானும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும்