பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுளம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "முற்றடியின்றி என்ற இவை தூக்குப்பட்டு முடியுமடி யல்ல (எ - று). மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள், ஒருசார்’ என்பது ஒழியசை ன்னை? அது சீராகலின் அதனோடு சில அசை கூடியன்றி அசையெனப்படாமையின். ஆங்கு என வருந் தனிச் சொல் வழியசை யெனப்பட்டது; என்னை? அஃது, அசையாய் நின்று சொற்சீரடியாகலின்.3 மற்றுச் சொற்சீரடியினை அசை யென்றதென்னையெனின், இயலசை தானேயும் ஒழியசையாய் நிற்குமென்றற்கென்பது. “ஒருஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர்” (கலி. 88) என்புழி ஒரூஉ வெனநின்ற இயலசைதானே ஒழியசையாய் நின்றது.4 'உகுவது போலுமென் னெஞ்சு, எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில்’ (கலி. 33) என்பது வழியசைபுணர்ந்த சொற்சீரடி; என்னை? எள்ளி' என நின்ற சீரின்வழித் தொகுபு என வந்தவசை உகுவதுபோலு மென்னுந் தொடையொடு பொருந்தி, 'உகுவது போலுமென் னெஞ்செள்ளித், தொகுபுடன்’ எனப் புணர்ந்து நின்றாற் போல்வதொரு சுவை மைசெய்து 1. முட்டடி-முற்றடி முற்றடி யெனவே பாடங்கொண்டார் இளம்பூரணர். முற்றடியின்றிக்குறைவு சீர்த்தாகி என்றது, தாக்கு என்னும் உறுப்பினால் தனியடி யாகத் துணிக்கப்பெற்று முடிதலின்றி: நின்னொக்கும் புகழ்நிழலவை' கறையணி மிடற்றினவை' என்றாங்குக் குறைந்த சீருடையதாய அடியினை. 2. ஒருசார் என்றாற்போன்று தான்சீராய் நின்றும் தன்னோடு சில அசை கூடியன்றி அடியெனப்படாதது ஒழியசை ' எனப்படும் சொற்சீரடியாகும். 3. அசையெனப்படாமையின்’ என்பதனை அடியெனப்படாமையின்’ எனத் திருத்திக்கொள்க. ஆங்கு என்றாற்போன்று வரும் தனிச்சொல் அசையாய் நின்று சொற்சீரடியாமாதலின் வழியசை யெனப்பட்டது. 4. ஒருஉ என்றாங்கு இயலசைதானே யாயும் ஒழியசையாய் நிற்கும் என்றற்குச் சொற்சீரடியினை அசையென்றார்.