பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஉம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அளவியல் வெண்பாட்டும் உளவென்பது உம், அதுவே சிறப்புடையதென்றற்கும் அங்ங்னங் கூறினானென்பது இனி, அவற்றைத் தத்தம் வகையாற் சுருக்கப் பெருக்கம் உணருங்கால் உய்த்துக்கொண்டுணர்தல்’ என்பதனான் உணரப் படும்; என்னை ? நெடுவெண்பாட்டிற்கு உயர்ந்த அளவை பன் னிரண்டடியெனவே, அதன் பாகமாய ஆறு அளவியல் வெண்பா விற்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்த வெல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவிற்கு இழிந்த வெல்லை நான்கடியெனவும் கொள்ள வைத்தமையி னென்பது.? இங்ங்னம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதனோக்கிப் பதினெண்கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரித்துள்ளும் ஆறடியி னேறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோருமெனக் கொள்க : இக்கருத்தினானே, "அம்மை தாணே யடிநிமிர் பின்று’ (தொல்-செய்-335) எனக்கூறிய நெடுவெண்பாட்டு நேர்ந்திலன் ஆசிரியன் அதற் கென்பது; அஃதேல், அவ்வளவியல் வெண்பாவுள்ளும் ஆறடி யானும் ஐந்தடியானும் வருதல் சிறுவரவினவாலெனின், - அங்ங்னமே செப்பிக்கூறிய மரபிற்றாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல்பன்றாகலின் அவற்றுள்ளுஞ் சுருங்கிய நான் கடியே சிறந்ததென்று அதனையேபற்றிப் பெரும்பான்மையுஞ் செய்யுள் செய்தாராவரென்பது அஃதேல், குறளடி வெண்பா அதனினுஞ் சிறந்ததாம் பிறவெனின்,- அற்றன்று: செப்பிக்கூறுங் கால் தெரியக் கூறல்வேண்டுமாகலின் அளவியல் வெண்பாவே பயின்றவென்பது, நெடுவெண்பாட்டுப்போலச் சிறப்பின்றாங் குறுவெண்பாட்டுமெனின் : 1. குறுவெண்பாட்டு நெடுவெண்பாட்டு எனக்குறுமையும் நெடுமையும் அளவியலுடன் வைத்துப் பெயர் கூறியதனால் அவற்றுக்கு நடுவெல்லையாகிய அளவியல் வெண்பாட்டும் உண்டென்பதும் அதுவே சிறப்புடையதென்பதும் உய்த்துணர வைத்தார் ஆசிரியர். 2. நெடுவெண்பாட்டு - பஃறொடைவெண்பா. அதன். உயர்ந்த அளவு பன்னிரண்டடி யெனவே அதன் சரிபாதியாகிய ஆறடி அளவில் வெண்பாவுக்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்த எல்லை ஏழடியெனவும் அளவியல் வெண்பாவுக்கு இழிந்த எல்லை நான்கடியெனவும் கொள்ளவைத்தமையின் இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தியாகும். 3. இக்கருத்தினானே ‘அம்மைதானே யடிநிமிர்பின்று: எனக்கூறிய ஆசிரியன் அதற்கு நெடுவெண்பாட்டு நேர்த்திலன் என்பது' என @ಣLSTäಹ.