பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளருக -9ణ్ణి శ్రీ "சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல்” என்பதனான், அவ்விரண்டினுள்ளும் அதனைப் பிற்கூறியது அச் சிறப்பு நோக்கியன்றோவென்பது : 1 உ-ம்: 'அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று' (குறள்-259) எனவும், 'அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் சிறந்தார் செறிந்தமை யாராய்ந்து கொண்டு (யா. வி. ப. 226) எனவும், இவை குறுவெண்பாட்டு. "துகடிர் பெருஞ் செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்கால் போல வரும்’ (நாலடி-1-2) எனவும், "நாண்ஞாயி லுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத்-தாண்மாய்ந்து முன்பக லெல்லாங் குழம்பாகிப்-பின்பகற் றுப்புத் துகளிற் கெழுஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து' (களவழி :). எனவும், 'நானாற் றிசையும் பிணம் பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த விடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைந் துரறெறிந் தற்றே யெரிமணிப்பூ ணேந்தெழின் மார்பத் தியறிண்டேர்ச் செம்பியன்றெல் வேந்தரை யட்ட களத்து’ (களவழி.6) எனவும், இவை அளவியல் வெண்பாட்டு: 1, GF55 கூறிய மரபினவாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல்பன்றாகலின் அளவியல் வெண்பாவிற் சுருங்கிய நான்கடியே சிறந்ததென்று கொண்டு பெரும்பாலும் செய்யுள் செய்தனர். அங்ஙனம். செப்பிக் கூறும். பொழுதும் கேட்போர்க்குப் பொருள் தெரியக்கூறல் வேண்டுமாதலின் அளவியல் வெண்பாவே பயின்றன. நெடுவெண்பாட்டு குறுவெண்பாட்டு என்னும் இரண்டினுள்ளும் சிறப்புடையது குறுவெண்பாட்டேயாதலின் சிறப்புடைமை தோன்றப் பிற்கூறப்பட்டது.