பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வருக يسكي ليبيي f سميت றனிய னெனப்படுவான் செய்தநன் றில்லா னினிய னெனப்படுவான் யார்யார்க்கே யானு முனியா வொழுக்கத் தவன்” (நான்மணி, க:0) "ஆரெயின் மூன்று மழித்தா னடியேத்தி யாரிடத்துத் தானறிந்த மாத் திரையா னாசாரம் யாரு மறிவ தறனாக மற்றவற்றை யாசாரக் கோவை யெனத்தொகுத்தான் lராத் திருவாயி லாய திறல்வண் கயத்துார்ப் பெருவாயின் முள்ளியென் பான்” (ஆசாரக் காப்பு) என இவை முறையே வந்தன. ஒழிந்த நெடுவெண்பாட்டு வந்துழிக் காண்க. ஆய்வுரை : இது வெண்பாவிற்கு அடியளவு கூறுகின்றது. (இ-ள்) நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண்பாட்டிற்கு அளவு, அளவடியும் சிந்தடியும் சேர்ந்தமைந்த எழுசீராம் எ-று. குறுமை நெடுமை என்ற வேறுபாடு அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தொன்றினை அளவாகக் கொண்டே வகுத்துரைக்கப்படுதலின் குறுவெண்பாட்டிற்கும் நெடுவெண்பட்டிற். கும் இடைப்பட்ட அளவியல் வெண்பாட்டும் உளவென்பதும் அதுவே பெரும்பான்மையும் பலராலும் இயற்றப்படுவதென்பதும் பெறப்படும். நெடுவெண்பாட்டிற்குப் பேரெல்லை பன்னிரண்டடி. :ெனவே அதனிற் பாதியாகிய ஆறடி அளவியல் வெண்பாவின் உயர்த்த எல்லையெனவும். நெடுவெண் பாட்டின் சிற்றெல்லை ஏழடி யெனவும். அளவியல் வெண்பாவின் சிற்றெல்லை நான். கடியெனவும் கொள்ளவைத்தாராயிற்று. அளவியல்வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியின் மிகாமற் செய்யுள் செய்தனர். அம்மை யென்னும் வனப்புடைய செய்யுட்கு நெடுவெண்பாட்டு ஏற்புடையதன்றென்பது, "அம்மை தானே அடிநிமிர் பின்றே (செய்-227) எனவரும் தொல்காப்பிய நூற்பா வால் இனிது புலனாம். செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனவும், சிறப்புடைப் பொருளைப் பிற்படக்