பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளருஉ அஉரு பாட்டு முரையும் பயிலாதனவிரண் டோட்டைச் செவியு முள’ என்பது, நான்கடியான் வந்த அங்கதம்: பிறவும் அன்ன. இது, மந்திரத்தின் வேறுபட்டு அடிவரைத்தாயினமையின் இதுவும் வெண்பாட்டுப் போன்று அமைந்து வரல்வேண்டு மென்றற்கும், இது வேறு பாட்டெனப்படாமையின் அடிவரை யின்றுகொலென்னும் ஐயந்தீர்த்தற்கும் இதற்கே ஈண்டு அளவை, கூறி. அதனோடும், கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுள்' (த்ொல் - செய்-118) என்று ஒதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொன் எாயிரத்துட் போலப் பலவாயினும் அவற்றுக்கு அளவையும் வெண்பாவின் அளவேயென்று அடக்கினானென்பது. நூற்பாவாக அடிவரைப் படுவன உளவாயினவற்றுக்கும் இஃதொக்குமென்பது மேற் கூறுதும். (கருக) நச்சினார்த்தினியம் : இது வசைப்பாட்டெல்லை கூறுகின்றது. (இ-ஸ். ) வசைப்பாட்டி னெல்லை? முற்கூறியவைபோல ஈரடிச்சிறுமையும் பன்னிரடிப் பெருமையுமாய் வரும். எறு. உ-ம். 'இருடிர் மணிவிளக்கத் தேழிலார்’ இது நான்கடியான் வந்தது. பிறவு மன்ன. ஆய்வுரை : இஃது அங்கதப்பாட்டிற்கு அடியளவு கூறுகின்றது. 1. அங்கதப்பாட்டாகிய இது மந்திரத்தின் வேறுபட்டு அடிவரையுடைய. தாயினமையின் வெண்பாப்போன்று அடிவரையுடையதாய் வர்ல்வேண்டும் என்றற்கும், மந்திரத்தின் தன்மையுடைய அங்கதத்திற்கு மத்திரத்திற்குப்போன்று அடிவரையறையில்லைகொல் என்னும் ஐயத்தினை நீக்குதற்கும் இச்சூத்திரத்தால் அளவை கூறி, கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுள்' என இதனுடன் ஒதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட்போலப் பலவாய் வரினும் அவற்றுக்கு அளவையும் வெண்டாவின் அளவேயென்று அடக்கினார் தொல்காப்பியனார். 2. வசைப்பாட்டு' என்றது, அங்கதப்பாட்டினை.