பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னருங் ణ్డ శ్రీ థ్రి சுருங்காவென்பது உய்த்துக்கொண் டுணர வைத்தானென்பது; என்னை? கைக்கிளைப் படலத்துள்: 'போற்றி வெண்பா வாகி மற்றத னிறுதி யைஞ்சீ ராசிரி யம்மே” என்றாராகலின். மற்று மூன்றடியிற் சுருங்காது ஆசிரியமாத லானும் இரண்டடியிற் சுருங்காது வெண்பாவாதலானும் இவ் வைந்தடியிற் சுருங்காவென்று கொள்க. இது, "பண்புற முடியும் பாவின’’ (தொல்-செய் 161) என மேற்சொல்லும், அவற்றுக்குச் செய்யுள்; 'நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றிங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் துவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர்” (கவி-24) என்பது, பதினேழடியான் வந்த கலிவெண்பாட்டு. 1. கைக்கிளைப்படலம் என்றது, பன்னிரு படலத்தின் பகுதியாகிய கைக்கிளைப் படலத்தினைக் குறித்ததாகும். 2. வெண்பா இரண்டடியிற் சுருங்காமையும் ஆசிரியம் மூன்றடியிற் கருங்காமையும் உடையவாதலின் அவ்விரண்டுங்கூடிய கூட்டமாகிய மருட்டா ஐந்தடியிற் கருங்கி வாராது என்றார்.