பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் “சுடர்த்தொடீ கோளாய்” {கலி-51) என்பது, ஒரு பொருணுதவிப் பதினாறடியான் வந்தது. "திருந்திழாய் கேளாய்” (கலி-65) என்பது, இருபத்தொன்பதடியான் வந்த கலிவெண்பாட்டு. ஒழிந்தனவும் அன்ன; நூற்றைம்பது கவியுள்ளுங் கைக்கிளை பற்றி இவ்வாறு வருங் கலிவெண்பாட்டுக் காணாமாயினமையிற் காட்டாமாயினாம். இலக்கணமுண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கண்டுகொள்க. 1 'கனவினிற் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலக்கு நாணு மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று” (முத்தொள்ளாயிரம்:69) இது, கைக்கிளைபற்றி வந்த கலிவெண்பாட்டென்னாமோ வெனின், என்னாமன்றே, அது பாடாண்டிணைப் புறப்பொரு ளாகலானும் ஒருபொருணுதலுதல் ஐந்திணைக்கண்ணதேயாக லானும் பன்னிரண்டடியின் இகந்ததன்றாகலானும் வெண்பா வேயாமென்பது.? இப் பொருட்பகுதி யுணராதாரும் இது மர பென்ப தறியாதாரும், நூற்றைம்பது கலியுள்ளும் இவை கோப் புண்டன வென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருணுத லியன ஒழிந்தன வெல்லாம் வெண்பா வென்று அடிவரை கூறா தொழிப. அங்ங்னம் மரபழியக் கூறின் ஒரு சாத்தனை நாட்டி அவனைக் காமுற்று இவள் இன்னவா றாயினளென ஆசிரியத் தானும் வஞ்சியானும் பொருள் வேற்றுமையுடைய ஒருசார்க் கொச்சகமல்லாத கணிப்பாவினானுஞ் செய்யுள் செய்தலும், 1. கலித்தொகையிலுள்ள நூற்றைம்பது கலிப்பாவுள்ளும் கைக்கிளைப் பொருளிலமைந்த கலிவெண்பா காணப்படாமையின் அதற்கு உதாரணங்காட்டப்பெறவில்லை; கைக்கிளைப் பொருள்பற்றிக் கலிவெண்பா வருதலுண்டு என்னும் இலக்கணமுண்மையால், அதற்குரிய இலக்கியம் வந்தவழி அதனை உதாரணமாகக்கொள்க என்பதாம். 2. இங்குக் காட்டப்பெற்ற முத்தொள்ளாயிரப்பாடல் பாடாண்டிணைப்புறப்பொருளாதலானும், கலிவெண்பா ஒருபொருள் நுதலிவருதல் என்பது அன்பின் ஐந்திணை பற்றியதாதலானும், கைக்கிளைப்பொருள் பற்றிவரும் கலிவெண்பா பன்னிரண்டடியின் மிக்குவருமாதலானும் இது கலிவெண்பாவாகாது. நான்கடியால் வந்த இது அளவியல் வெண்பாவேயாம்.