பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க., உ. தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரை வளம் கடாவலும் ஊடலுங் காரணமாக அன்பிலனென்று இல்லது சொல்லினமையின் அவை ஒருதலையன்பாகா வென்பது மற்று. "என்னை, புற்கை யுண்டும் பொருந்தோ ளன்னே உமணர் வெரூஉந் துறையன் னன்னே' (புறம்-84) என்னும் புறநானூற்றுப் பாட்டும் பெண்பாற் கைக்கிளையாதவின் அதனை ஆசிரியத்தான் வாராதென்ற தென்னையெனின் - 'ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின’’ (தொல்-செய்.18) என்புழிச், சிறுபான்மை தலைவி கூற்றாகியே வருவன அமையு மென்று போதந்தாமாகவின் அதுவே பெருவிதியாகாதென்பது.? இனிக் கைக்கிளை வருமாறு : "திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலஞ் சேவடியுந் தோயு மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே’ (புற வெ மாலை-கை-8) இது, நெஞ்சிற்குத் தலைமகன் சொல்வினது; தற்காம மன்றா மாகலின். இக்கருத்தினானே; இதனைப் புறத்தினையுட் கொண்டாருங் கைகிக்ளைப் படலத்து, 咳杯 நெஞ்சிற் குரைத்தலுங் கேட்போ ரின்றி யந்தர மருங்கிற் கூறலு மல்லது சொல்லலுங் கேட்டலு மில்லை யாக வகத்திணை மருங்கி னைவகை யானு மிகத்த லென்ப விவ்வயி னான” என்றாரெனக் கொள்க. 1. ஒருதலையன்பு-ஒருபாற் கேண்மையாகிய கைக்கிளை. 2. ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின என்ற சூத்திரவுரையில் 'அங்கதமும் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வரும் என்பது பாக்களால் வருவன அமையும் எனக் கூறிப்போந்தாம், அதுவே பெரும்பான்மை பற்றிய விதியாகாது என்பதாம். படும்' எனப் பெண்பாற்கைக்கிளை சிறுபான்மை ஆசிரிய முதலிய மற்றைப்

  • நற்காமம் என்றது. அன்பினைந்தினையொழுகலாற்றை. ஒருபாற் கேண்மை கைக்கிளையாதலின் அதனை 'தற்காமம் அன்று என்றார்.