பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எருக இ! 8. இ. பாடாண் கைக்கிளைக்கும் ஈண்டே அளவு கூறுகவெனின் கலிவெண்பாட்டினைக் கைக்கிளை யென்னாமாயினன்றே ತಿಣ கடாவாவது. மருட்பாவிற்குக் கைக்கிளைப்பகுதி வரைந்தோதல் வேண்டுவதின்மையின் அதற்கும் இதுவே அளவாமென்பது. ஒழிந்த மருட்பா மூன்றற்கும் உதாரணம் மேற்காட்டுதும். இக் காலத்தார் ஏறிய மடற்றிற (51) மென்னும் பெருந்தினைப் பொருண்மேலுங் 'காமஞ்சாலா விளமையோளை ஒழிந்த மகளி ரொடுங் கூட்டியுரைக்குங் கைக்கிளைப்பொருண்மேலுங் கலி வெண்பாட்டெனப் பெயர் கொடுத்துச் செய்யுள் செய்பவால் அவை அவ்வாறு செய்தற்கும் அவை முப்பதிற்றடியின் இகந்து எத்துணை யடியினும் ஏற்கு மென்றற்கும் என்னை ஒத்தெனின், அவ்வாறு வருமென்பது இந்நூலுட் பெற்றிலமாயினும் இரு பதின் சீர்க் கழிநெடிலடி யானும் இது பொழுது செய்யுள் செய்யுமாறுபோலக் காட்டலான் அமையும். அவை புலனெறி வழக்கிற்குச் சிறந்திலவாகலிற் சிறு வரவினவென் றொழிக.3 (கசு 0) நச்சினார்க் திரிையம் : இது “ஒருபொரு ணுதலிய” (செய். கருச) என்னுஞ் சூத்திரத்திற் சீர்வகைக் கலிவெண்பாவிற்கும்,நால்வகை மருட்பா விற்கும் அடிவரையறை யின்மை கூறுகின்றது. (இ-ள்) கலி. றிவை எது கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், புறநிலைவாழ்த்துப் பொருண்மேல் வருஞ்செய்யுள், வாயுறை வாழ்த்துப் பொருண்மேல் வருஞ்செய்யுள், செவியறி. வுறுஉப்பொருண்மேல்வருஞ் செய்யுள் என்றிவ் வைந்தும். தொகு.ப எது பெருமைக் கெல்லை யித்துணையெனத் தொகுத்துக்கூறுந் தன்மையையுடைய அளவால்வரும் அடியை. யுடைய வல்லவென்று கூறுவர் புலவர். எ-று. 1. கைக்கிளை கலிவெண்பாட்டாகவும் வருதலின் கலிவெண்பாட்டிற்குரிய அளவே பாடாண் கைக்கிளைக்கும் அளவாகக் கொள்ளப்படும் என்பதாம். 2. கைக்கிளையொழிந்த புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவி. யறிவுறு உ என்னும் மருட்பா மூன்றற்கும் அடுத்த சூத்திரத்துள் உதாரணங்காட்டுவோம். 3. பிற்காலத்தார் செய்த உலாச் செய்யுளாகிய அவை தொல். காப்பியனார் கூறிய அன்பி னைந்திணை யொழுகலாறு பற்றிய புலனெறி வழக்கிற்குச் சிறந்தனவாகாமையின் அவை சிறுபான்மையாய்ச் செய்யுள் வழக்கில் இடம்பெறுவனவாயின வெனக்கொள்க.