பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உ-ம். "சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடும்' (கவி. ருக) இது ஒருபொருணுதலிப் பதினா றடியான் வந்தது. 'திருந்திழாய் கேளாய்” (கலி. சுரு) என்பது இருபத்தொன்பதடியான் வந்தது. இதனைக் கைக்கிளையோ டெண்ணுதவிற் கைக்கிளைப் பொருளொடுங் கலிவெண்பாட்டு வருதல் கொள்க. அது கலித்தொகைக்கணின்மையிற் காட்டாமாயினாம். ஒழிந்த வுறுப்போடு கூடிய கலிவெண்பாட்டுக்கள் பெற்ற அடிவரையறையும் அவ்வுதாரணங்களுட் காண்க. இனிக் “கனவினிற் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலங்கு நாணு-மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று” (முத்தொள்.) இது புறப்புறக் கைக்கிளை. இதனைக் கைக்கிளைப் பொருண் மேல் வந்த கலிவெண்பாட்டெனின் இது சுட்டி யொருவர்ப் பெயர்க்கொண்ட பாடாண்டினைப் புறப்பொருளாகலானுங் கலிவெண்பாட்டு அப்பொருண்மேல் வருதல் சிறுபான்மையாகலானும் இது பன்னீரடியி னிகவாது வருதலானும் வெண்பாவே. யாம். இவ்வாறு புறப்பொருளான் வந்து இரண்டுறுப்பாயும் ஒருறுப்பாயும் பாவும் பொருளும் வேறுபட்டு வெள்ளடியி னிகந்துவரும் கலிவெண்பாவாகிய உலாச்செய்யுள் அடிவரை. யன்றி வருமாறும் பெருந்திணைப் பொருண்மேல்வரும் மடற். செய்யுளும் ஒருறுப்பாய் அடியிகந்து வருமாறும் இக்காலத்துக் கூறுகின்றவற்றுட் காண்க. அது திருவுலாப்புறத்துள்ளும் "வாமான வீசன் வரும்” (ஆதியுலா) என முடித்து மேல் வேறோருறுப்பாயவாறும் ஒழிந்த உலாக்களுள் வஞ்சியுரிச்சீர் புகுந்தவாறும் அடிவரையறை யின்மையுமாம். அகப்புறமும் புறப்புறமுமாய மருட்பாவாய்க் கைக்கிளை யடிவரையறையின்றி வந்தன வந்துழிக் காண்க. காமஞ்சாலா இளமையோன்வயின் வந்த கைக்கிளையுங் காட்சி முதலிய கைக்கிளையும் ஆசிரியத்தினும் வஞ்சியினும் வாரா. எனவே பொழிந்தபாவினுள் எல்லாக் கைக்கிளையும் வருமாயிற்று.