பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னருச அங். கி. "வெண்பா வியலினும் மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின’ (473) என்றமையின். இங்ங்னம் எண்ணப்பட்ட மூன்று பொருட்கும் இலக்கணம் முன்னர்ப் பாவிரியோத்தினுட் கூறினவற்றுக்கு இன்னவாறு செய்யுள் செய்க வென்றற்கு இது கூறினா னென்பது: (இ - ள்) இம்மூன்றும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வரும் (எ று). 'திறநிலை மூன்று என்றான், முற்கூறியனவெல்லாம் அகத் திண்ையாகலின். இவை புறத்தினையுளல்லது வாராவென்றற் கென்பது. திண்ணிதிற் றெரியினென்பது இவை மூன்றுங் கைக்கிளை மருட்டாப்போல் ஆண்பாற் கைக்கிளையும் பெண் பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒரு தலையாகவே புறத்தினையென்று தெரியப்படுவன வென்ற வாறு. இதன் பயம்: கைக்கிளை மருட்டாப் புறத்திணையானும் வருமென்பது இயல்’ என இருகாற் சொல்வியவதனான் இயற்சீர் வெள்ளடியான் வெண்பா வருதல் சிறந்ததெனவும் அதற்கேற்ற வகையான் ஆசிரியம், இயற்சீரான் வருதல் சிறந்த தென வுங் கொள்க.5 பண்புற முடிதல்' என்பது மேற் சிறுமைக் 1. செய்யுளியல் 85-ஆம் சூத்திரத்து, ஆசிரியமும் வெண்பாவுமாகிய இருகூறு மல்லது மருட்பாவுக்குத் தனது ஒசையிது வெனக் காட்டுந் தனி நிலையில்லை யென்றவழி ஆசிரியத்தினை முன்னும் வெண்பாவினைப் பின்னுங்கூறினாராயினும் அவ்விருபாவின் கூறுகளும் மருட்டாவின் அமைந்து நிற்கும் நிலை வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னும் என்பது இங்கு விளங்கக் கூறப்பட்டது. 2. புறநிலை, வாயுறை, செவியறிவுறுT2 என்பன மூன்றும் இவ்வியலிற் பாவுறுப்பினை விரித்துக்கூறும் பகுதியில் விளக்கப்பெற்றன. மேற்குறித்த பொருள்கள் பற்றிய செய்யுள் இன்னவாறு அமையும் என்பது இச்சூத்திரத்தால் விளக்கப்பெற்றது. 3. புறநிலைவாழ்த்து முதலிய இவை மூன்றும் புறத்தினையு ளல்லது வாரா என்பார் திறநிலை மூன்றும் என்றார். 4. இவைமூன்றும் கைக்கிளை மருட்பாப் போன்று அகமும் புறமும் பற்றி வாராது ஒருதலையாகப் புறத்தினையென்று தெரியப்படுவன: என்பார் 'திண்ணிதின் தெரியின் என்றார். இவ்வாறு கூறியதனாற்பயன் கைக்கிளை மருட்பாப் புறத்திணைக்கண்ணும் வரும் என்பதாம். 5. வெண்பாவியல், ஆசிரியவியல் என இயல்’ என்பதனை ஈரிடத்தும் சேர்த்துரைத்தமையால் வெண்பா இயற்சீர் வெள்ளடியாலும் ஆசிரியம் இயற். சீராலும் வருதல் சிறந்தது என்பதாம்.