பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா விருஅ அசன் மேலைச்சூத்திரமும் அளவியலே கூறியவாறாயிற்று. இனி அவைபடும் பகுதி யாவையுங் கூறுகின்றான், நொடியொடு புணர்ந்த வென்ற மிகையான் இதுவன்றி இதுபோல்வது பண் ணத்தி யென்பதும் ஒன்று உண்டென்பது கொள்க. அது முன் னர்ச் (492) சொல்லுதும், (ருகாக) நச்சினார் க்தினிையம் : இது முற்கூறிய ஆறற்கும் பெயரும் முறையும் உணர்த்திற்று. (இ.ஸ்). முற்கூறிய அடிவரை யில்லாதனதாம் நூலின்கண் ணா வனவும், உரையின்கண் ணாவனவும், நொடியின்மாத்திரையவாகிய பிசியின்கண் ணாவனவும், ஒருமொழிக் கேதுவாகி வரும் முதுமொழிக்கண் ணாவனவும், மறைத்துக்கூறுஞ் சொல்லாற் கூறிய மந்திரத்தின்க ணாவனவும். கூறுகின்ற பொருளை யிடைக் கரந்து கூறுங் குறிப்பின்கண் ணாவனவுமென ஆறுவகைப்படும். எ-று. 'நூலினான எது சூத்திரச் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அளவை பெறாதனவற்றை நோக்கிற்று. அச்சூத்திரத்தை நோக்கி வருமுரையும் ஒரு செய்யுளாம். ஒழிந்தன வழக்கின் கண்ணுஞ் செய்யுட்கண்ணும் வரினும் ஈண்டுச் செய்யுளை நோக்குதற்கு அவற்றுக்கண்ண வென்றார். இவையும் அளவிகந்து வருவனவே. அளவு முற் கூறிற்றாம். ఆక్టి, శీs aహ3 : இஃது அடிவரையில்லனவாக மேற்குறித்த அறுவகையினையும் விரித்துரைக்கின்றது. 1. அடிவரையில்லாத இவை ஆறு எனவே மேலைச் சூத்திரமும் அளவியலே கூறியதாயிற்று. 2. பிசி, என வாளா கூறாது நொடியொடு புணர்ந்த பிசி என அடைமொழி புணர்த்துக்கூறிய மிகையால் இங்ஙனம் நொடித்தலொடு வரும் பிசியன்று. இதுபோல்வது பண்ணத்தி யென்னும் செய்யுளும் ஒன்றுண்டென்பது கொள்ளப்படும். 3. நூலினான' என்றது. சூத்திரமாய்வரும் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அடிவரை பெறாதவற்றை நோக்கிற்று. இத்தகைய சூத்திரங்களை நூற்பா என வழங்குதல் மரபு. பிற்கால நூலாசிரியர்கள் நூற்பா நடையிலன்றி வெண்பா கட்டளைக் கலித்துறை முதலான பாக்களால் இலக்கணநூல் இயற்றியுள்ள்ாராதலின் அடிவரையுடைய செய்யுள் வகையில் இயற்றப்பட்ட அவை அடிவரை யில்லனவெனப்படா: ஆசிரியமாய் வந்து அடிவரை பெறாதனவே ஈண்டு 'நாலினாக' எனவரும் நூற்பா என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும்.