பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் ஆய்வுரை இது, நூலின் இயல்புணர்த்துகின்றது. (இ.ஸ்) அவற்றுள், நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபாடின்றி யமையக் கருதிய பொருளைத் தொகுத்தும் வகுத்துங் காட்டித் தன்கண் அடங்கிய பொருள்களை விரித்துரைத்தற்கு ஏற்ற சொல்லமைப் போடு பொருந்தி நுண்ணுணர்வு பொருந்த விளக்குதலாகிய அது அகற்குரிய இலக்கணமாகும் எறு. அதன் பண்பு நுண்ணிதின் விளக்கல் அது என இயையும். இச்சூத்திரம் முதற்கணுள்ள அவற்றுள் என்னும் சொற்சீரடியின்றி, துதலிய பொருளை முதலிற்கூறி என்பதனை இரண்டா மடியாகப் பெற்று இறையனார் களவியலுரையில் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளது. ளகரம் அதுவே தானும் ஒருநாள் வகைத்தே.1 இஎம்பூரணம் : என்- எனின். நூல் பாகுபடுமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட நூல் நான்கு வகையை யுடைத்து என்றவாறு. அவையாமாறு முன்னர்க் கூறப்படும். (ககூ0) அதன் வகை உணர்த்துகின்றது. (இாள்) அந்நூற் பகுதி நான்குவகையாம் (எ-று). முள் பக்கத் தொடர்ச்சி ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஒத்தி னானனும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்’ ஒருநெறிப்படப் புணர்க்கப்படுந் தன்மையுடையான் என்க, எனத் தொல்காப்பியம் எழுத்ததிகார முதற்குத்திர வுரையில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 1. அதுவே தானும் ஈரிரு வகைத்தே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 'அது' என்பது மேற்குறித்த நூலைச் சுட்டிநின்றது. நால்வகையாவன சூத்திரம், ஒத்து, படலம், பிண்டம் என்பன.