பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என கூக அருக அவை முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம்: மேல் தொதையினும் வகையினும் (478) என்றதனானே தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு (452) என்னும் நால் வகை யாப்பிற்குந், தொகையினும் வகையினும் பொருண்மை சாட்டுதல் ஒக்குமென அவையிரண்டும் நான்காதலுமுடைய வென்பது.? அவை எழுத்து முப்பத்துமூன்றெனத் தொகுத்த வழிக் குறிலும் நெடிலும் மெய்ம் மூவினமுஞ் சார்ந்துவரும் மூன்று மென வகுத்தலும், “இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறு’’ (தொல்-எழுத்-புணர் : 1) என வகுத்தலுமென்றாற்போல்வன. உயர்திணை அஃறிணை யெனத் தொகுத்து ஐம்பாலென வகுத்தலும் அது. ஒழிந்த மூவகை நூலிற்கும் இவ்வாறே ஒருவழித் தொகுத்தலும் வகுத் தலுங் கொள்க. (கசு)ை நச்சினார்க்கினியம் : இஃது அந்நூற்பகுதி நான்காமென்கின்றது. (இ-ள்). அந்நூற்பகுதி நான்காம் எறு. ஆய்வுரை : இது நூலின் பாகுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த நூல்தான் நால்வகைப்படும் எ-று. ளகக ஒருபொருள் துதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஒத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கனை மரபின் இயலும் என்ப. இளம்பூரணம்: என்- எனின். மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமா மாறு உணர்த்துதல் நுதலிற்று. 1. அவை நான்கினையும் அடுத்த சூத்திரத்துட் கூறுவோம். 2. மேலே குறிக்கப்பட்ட தொகைவகையிரண்டினும் பொருண்மை காட்டுதல் தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்னும் நால்வகையாப்புக்கும் ஒக்கும் என்பது இதனாற்போந்த பயனாகும். 3. நான்கும் பின்வரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும்.