பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்.) ஒருபொருள் துதலிய சூத்திரத்தானும் என்பதுஆசிரியன் பாதானு மொரு பொருளைக் குறித்துக் கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு. இனமொழி கிளந்த ஒத்தினானும் என்பது-இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஒத்தினானும் என்றவாறு. பொதுமொழி கிளந்த படலத்தானும் - என்பது - மேற் சொல்லப் பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு. மூன்றுறுப் படக்கிய பிண்டத்தகனும் என்பது - இம்மூன்ற னையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு. ஆங்கனை மரபின் இயலு மென் ப என்பது - அம்மரபினான் இயலும் நூலென்ப என்றவாறு. அவற்றிற்கு இலக்கண முன்னர்க் கூறப்படும். (ககாக) இஃது, அந்நான்கினுக்கும் பெயரும் முறையு முணர்த்துதல் துதலிற்று. (இ - ள்) நூலுள் ஒருபொருளையே துதலிவருவது சூத் திரமெனவும், இனமாகிய பொருளினையே தொகுப்பது ஒத்தென வும், பலபொருட்கும் பொதுவாகிய இலக்கணங் கூறுவது படல மெனவும், மூன்றுறுப்பினையுமுடையது பிண்டமெனவுங் கூறிய மரபினான் இயலும் நூல் (எறு.): (கசுஅ) நச்சினார் க்தினிையம் : இது அந்நான்கற்கும் பெயரும் முறையு முணர்த்திற்று. 1. சூத்திரம் என்பது ஒருபொருள் நுதலியது. ஒத்து என்பது, இனமாகிய பலபொருள்கள் சொல்லப்படுதற்கு இடனாய் அமைந்தது. படலம் என்பது மேற்சொல்லப்பட்ட இனமாகிய பலபொருள்களையும் விளக்கும் இயல்களுக்கு இடனாயமைந்தது. பிண்டம் என்பது. சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்களையும் ஒருங்கேயடக்கியது. அனைமரபின்-அம்மரபினால், 宏 2. ஒருபொருளையே துதலிவருவது சூத்திரம். ஓரினப் பொருளையே தொகுத்துரைப்பது ஒத்து. பலபொருட்கும் பொதுவாகிய இலக்கணங்கூறுவது படலம். இம்மூன்றுறுப்பினையும் ஒருங்கேயுடையது பிண்டம்.