பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக ச அருள நச்சினார்க் திரிையம்: இஃது ஒத்திலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்துகிடப்பப் பல வோத்தாகச் செய்யாது, மணியை நிரல்படவைத்தாற்போல ஓரினப்பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஒத்தென்று கூறுவர் சிறந்த சொற்புலவர். எ-று. நேரினமணியெனவே யொரு சாதியினுந் தம்மி னொத்தனவே கூறல்வேண்டும் எறு. வேற்றுமையோத்தும் வேற்றுமைமயங் கியலும் விளிமரபும் என மூன்றன்பொருளையும் ஒன்றாக வேற்றுமையோத் தென்னாது வேறுவேறு வைத்தவாறு காண்க.! ஆய்வுரை : இஃது ஒத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ - ள்.) ஒத்த இனத் தவாகிய மணிகளை ஒருவரிசைப்பட வைத்தாற் போன்று ஓரினத்தவாகிய பொருள்களை ஒரிடத்தே சேரத் தொகுத்து உணர்த்துவதனை ஒத்து என்ற பெயராற் கூறுவர் மொழித்திறத்தால் உயர்ந்த ஆசிரியர் எ று. நேர்தல் - ஒத்தல். ஒத்து - இயல். நிரல்பட வைத்தல். வரிசைப்பட அமைத்தல். வகாச ஒருநெறி இன்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும். இன் ம்பூர ைம் : என்-எனின். படலத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) ஓரினமாகிய நெறியின்றிப் பல நெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற் றொடர்வுபடின் அது படல மெனப் பெயராம் என்றவாறு. முன் பக்கத் தொடர்ச்சி விளிமரபு என மூன்றியல்களாக வைத்தது. ஒளினப்பொருளை ஒருவழிவைத்தல். என்னும் ஒத்திலக்கணம் பற்றியேயெனப் பேராசிரியர் தரும் விளக்கம் பெரிதும் பொருத்தமுடையதாகும். 1. பேராசிரியர் உரை நோக்குக, 2 . பொதுமொழி என்றது, பல்வேறு நெறிகளாற் கூறப்படும் இலக்கணங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொருளைக் குறித்த எழுத்து, சொல் என்றாற் போலும் பொதுச்சொல் படலம் அதிகாரம்.