பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எசுரு அருக (இ - ள்) ஒருநெறிப்பட்ட பொருளையன்றிப் பலவேறு வகைப்பட்ட பொருளெல்லாவற்றுக்கும் வேறுவேறு இலக்கணங் கூற வெண்ணி அவற்றுக்குப் பொதுவாக அமைந்த பொது மொழியாகத் தொடர்ந்து அமைக்கப்பெறின் அது படலம் எனப்படும் எ-று. பொது மொழியாவது, ஒருநெறிப்பட்ட ஒருவகைப் பொருளை மட்டும் உணர்த்துவதன்றிப் பலவேறுவகைப்பட விரவிய எல்லாப் பொருட்கும் பொதுவாக அமைந்த பொருளைக் குறித்து வழங்கு வதாகிய பொதுச் சொல்லாகும். அவையாவன : எழுத்து, சொல், பொருள் என்றாற் போன்று பலவேறுவகைப்பொருள் களையும் உள்ளடக்கி நிற்கும் பொதுச் சொற்களாகும். படலம் - அதிகாரம். ளகரு மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர் அது பிண்டம் என்ப. இாைம்பூரணம் : என்- எனின். பிண்டமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). மூன்றுறுப்பினையும் அடக்கின தன்மைத்தாயின் அதனைப் பிண்டமென்று சொல்லுவர் என்றவாறு. மூன்றுறுப்படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஒத்தும் படலமுமின்றாகி வரினும் ஒத்துப் பலவுண்டாகி படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும், அதற்குப் பிண்டமென்று பெயராம் என்றவாறு. அவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல், ஒத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம். அதிகாரத்தாற் பிண்டமாயிற்று இந்நூலென்று கொள்க. இவற்றைச் சிறுநூல் இடைநூல் பெருநூல் எனப்படும்.(கசுரு) இது பிண்டங் கூறுகின்றது. வாளாதே மூன்றுறுப்படக்கிய பிண்ட"மென்றான் மேல்; (தொல் செய்.168.) ஈண்டுச் சூத்திர மும் ஒத்தும் படலமுங் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனை யும் அடக்கிநிற்பது பிண்ட்மென்கின்றானென்பது. 1. முன்றுறுப்பாவன: சூத்திரம், ஒத்து, படலம் என்பன. பிண்டம் என்பது தொகுதி.