பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாசு.சு அ; 3 - பொருள்மரபில்லாப் பொய்ம் மொழியானும் என்பது-பொருளியல் பில்லாப் பொய்மொழியானும் உரை வரும் என்றவாறு. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது-பொரு ளைப் பொருந்திய நகைவழிமொழியாய் வருகின்றது என்றவாறு நகைமொழியாவது-மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தா தென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொரு ளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும் உரை வருமென்றார்.1 என்று உரைவகைநடையே நான்கென மொழிய என்பது-இவ் வகையினானவுரை நான்கு வகைப்படும் என்றவாறு. (ககாசு) இஃது, உரையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உரைப்பகுதிவழக்கு இந்நான்காகு மென்று சொல்லுவர் புலவர் (எ-று). ‘பாட்டிடைவைத்த குறிப்பினானு மென்பது, ஒரு பாட்டு இடையிடை கொண்டுநிற்குங் குறிப்பினான் வருவனவெனப் படும்; என்னை? பாட்டுவருவது சிறுபான்மையாகவின். அவை தகடூர் யாத்திரை போல்வன. மற்றுப். பிறபாடைவிரவியும் வருவனவோவெனின், அவற் றுள்ளுந் தமிழுரையாயின எல்லாம் பாட்டிடைவைத்த குறிப்பு’ என ஈண்டடங்கும், பிறபாடைக்காயின் ஈண்டு ஆராய்ச்சியின் றென்பது. 'பாவின் றெழுந்த கிளவி யானும்" 1. பொருத்தமில்லாத உரையினை நகைச்சுவைபடமறுத்து உண்மைப் பொருளுணர்த்தும் உரைநடை பொருளொடுபுணர்ந்த நகைமொழியாம் என்பது இளம்பூரணர் கருத்தெனத் தெரிகிறது. 2. பாட்டினை இடையிடையே கொண்டு நிற்கும் குறிப்பின்ால் வரும் உரை வகை பாட்டிடைலைத்தகுறிப்பு' என வழங்கப்படும். இதன் கண் உரைநடைப் பகுதிபெரும்பான்மையாகவும் பாட்டுக்கள் சிறுபான்மையாகவும் வருவன என்பது பேராசிரியர் கருத்தாகும். இவ்வாறன்றிப் பாட்டுக்கள் மிகுதியாகவும் உரைப் பகுதி சிறுபான்மையாகவும் வருவன உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள், எனப்படும். இவற்றிற்கு முறையே தகடூர் யாத்திரையையும் சிலப்பதிகாரத்தை யும் உதாரணமாகக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.