பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<罗带蛋r蚤° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் என்பது, பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப்படாவோவெனின், படா; பாட்டும் உரையும் நூலுமென 9ே1) வேறோ தினமையின். அல் லாத சூத்திரத்தாற் சொல்லாத பொருளினை உரையாற் சொல்வித் தொடர்பு படுப்பது பாட்டிடைவைத்த குறிப்பாவது: இஃது அன்னதன்று, வேறொருவன் சூத்திரத்திற் கூறிய பொருளையே மற்றொருவன் கூறுகின்றானாதலானென்பது. ஒழிந்த பாட்டிற் கும் இவ்வாறே பொருளெழுதின் அஃதொக்கும். அவை பாரதம், பருப்பதம் முதலாயின. "பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்' என்பது, ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்வன.3 அவை ஒர் யானையுங் குரீஇயந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கியையாப் பொருள்படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன. பொருளொடு புணர்ந்த நகைமொழியானுமென்பது, பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கேதுவாகுங் தொடர் நிலை. அதுவும் உரையெனப்படும். அவையாவன. சிறுகுரீஇ யுரையும், தந்திரவாக்கியமும் போல்வனவெனக்கொள்க. இவற்றுட் f 1. பாட்டின்றிச் சூத்திரத்திற்கு எழுதப்படும் உரைபோல்வன பாவின் றெழுந்த கிளவி எனப்படும். பாட்டு, உரை, நூல் என்பன தம்முள் வேறென ஆசிரியர் பகுத்துரைத்தலின் சூத்திரம் பாட்டெனப்படா. 2. சூத்திரமல்லாத பாட்டினால் விளக்கப்படாதபொருளை அவ்வாசிரி யனே உரையாற் சொல்லித்தொடர்புபடுப்பது பாட்டிடைவைத்த குறிப்பாகும். பாவின்றெழுந்த கிளவியாகிய இது. நூலாசிரியன் சூத்திரத்துட்கூறிய பொருளை உரையாசிரியன் விரித்துரைப்பதாகும். எனவே இவையிரண்டுந் தம்முள் வேறாகும், 3. மெய்ம்மையான் நிகழாதனவற்றை நிகழ்ந்தனவாகப்பொய்யே புனைத் துரைக்கும் முறையில் அமைந்த உரைநடை பொருளொடு புணராப் பொய் ம் மொழி எனப்படும். 4. உலகியல் வாழ்வுக்கு ஒவ்வாத பொய்யென ஒதுக்கப்படுதலின்றி மெய் யெனக் கொள்ளப்படும் பொருண்மையினைத் தன்யா கொண்டு நகைச்சுவையினை விளைக்கும் நிலையில் அமைந்த உரைநடை பொருளொடுபுணர் ந்தநகைமொழி' எனப்படும். சண்டுப் பொருளொடு புணர்தல் என்றது, உலகியல் வாழ்வுக்கு ஒத்தவுண்மைகளோடு பொருந்தியமைதலை,