பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக சு அகரு சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது. உலகியலாகிய நகை தோன்றுமென்பது. இவ்வகையான் உரை நான்கெனப்படு மென்றவாறு. உரைநடை யென்னாது வகை யென்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிதும் ஒன்றுண்டு. அது மரபியலுட் பகுத்துச் சொல்லுதும். (ங் க எ) நச்சினார்க்கினியம் : இது “நூலினான வுரையினான” (செய் எசுரு) என நிறுத்த முறையே நூலுணர்த்தி உரைகறுகின்றது. (இ-ள்.) பாட்டிடை வைத்த குறிப்பினானும் எ-து ஒரு பாட்டினை யிடையிடை கொண்டுநிற்குங் கருத்தினான் வருவனவும் எறு. அவை தகடூர் யாத்திரையும், சிலப்பதிகாரமும் போல்வன. ஆண்டுப் பிறபாடை தழுவி வருவன தமிழுரை யாகாமையின் ஈண் டாராய்ச்சி யின்றாம். அதன்கட் டமிழுரை யுள்ளன ஈண் டடங்கும். பாவின் றெழுந்த கிளவி யானும் எ-து பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவனபோல்வன. சூத்திரம் பாட்டெனப்படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதலின். அன்றியுஞ் சூத்திரங் கருதிய பொருளையன்றி யுரையான் வேறோர் பொருள்கூறி அதனைத் தொடர்பு படுத்திக் கூறாமையின்: ஆண்டும் ஒருவன் கூறியதற்கு ஒருவன் பொருள் கூறுகின்றானாம். ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே உரை கூறுவனவுமொக்கும். பொருளொடு புணராப் பொய்ம் மொழியானும் எ-து பொருண்முறைமையின்றிப் o,' பொய்யாகத் தொடர்ந்து கூறுவன என்று. அவை ஒர் யானையுங்குதிரையுந் 1. ஒத்த சூத்திரமுரைப்பிற்காண்டிகை மெய்ப்படக்கிளத்த வகையதாகி' எனவரும் மரபியற்குத்திரத்தில் 'உரைப்பின் என்றதனால், உண்ணின் கன்ற வுரையொடு பொருந்தி (செய். 188) வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளி யலுட்கூறிப் போந்தாம்; அங்ஙனம் வேறாகிப் பொருந்திவரும் எனப்பட்ட உாை யின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம். இதனது பயம் உரையுங்காண்டிகையுமின்றிச் சூத்திரத்தானே உரை நிகழ்ந்தகால, ஆண்டு. அஃது அவற்றை யொழிய ஆகா இக்காலத்து என்றாயிற்று உரைப்பின் என்னும் வினையெச்சம் கிளத்தல்’ என்பதனோடு முடியும். வகை யென்ற தனான் உரையெனப்பட்டது தானும் அக்காண்டிகையின் மெய்ப்படக்கிளந்ததே யாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிந்போந்த உரைவிகற்பமே யென்பது உணர்த்தியவாறு' என இவ்வுரைப் பகுதியினைப்பகுத்துக்கூறியுள்ளமை இங்கு இயைத்துணரத்தகுவதாகும். ஐ. இக்குறிப்பு நச்சினார்க்கினியர் மணிப்பிரவாள உரைநடையினை மனங்கொண்டுவரைந்த தெனத் தோற்றுகின்றது.