பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகிச8r தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறுசெய்தன வென்று அவற்றுக்கியையாப் பொருள்பட்டதோர் தொடர்நிலை யாய் ஒருவனுழையொருவன்கற்று வரலாற்று முறைமையான் வருகின்றன. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் எது பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டு நகுதற்கேதுவாகுந் தொடர்நிலையானும் எ-று. இவை சிறுக்குரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வன. இவை பொய்யெனப்படாது உலகிய லாகிய நகைதோன்றுதலின்; என் றுரைவகை நடையே நான்கென மொழிப எது என்றுரைப்பகுதி வழக்கு இந்நான்கு மென்றுரைப்பர் புலவர் எ-று. வகையென்றதனான் உரைப்பகுதி பிறிது முள. அவை மரபியலுட் கூறுட." ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே உரைவகையாமாறு உணர்த்து கின்றது. (இ.ஸ்) பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப் பினால் வருவனவும், பாட்டின்றி வழக்கின்கண் உர்ையளவாய் வருவனவும், பொருள் மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றிப் பொய்யே புனைந்துரைக்கும் முறையில் வருவனவும் பொய். யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாய் வருவனவும் என உரைவகைநடை நான்காகும் என்பர் ஆசிரியர் எ-று. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதி. காரத்தில் இடையிடையே வரும் உரைநடை பாட்டிடை வைத்த குறிப்பு எனப்படும். உலக வழக்கில் பாநடையிலன்றித் தனியே வழங்கும் உரைநடை பாவின் றெழுந்த கிளவி எனப் படும். யானையும் குருவியும் போலும் மொழித்திறம் பெறாத அஃறிணையுயிர்கள் தம்முள் நண்புகொண்டு இன்னவிடத்தில் இன்னவாறு செய்தன என்றாங்கு அவற்றின் இயல்புக்கு ஏலாதவகையிற் புனைந்துரைக்கப் பட்டுக் கதையளவாய் வழங்கும் உரைநடை பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி' 1. "வகை யென்றதனான் உரைப்பகுதி பிறிதுமுள. அவை மரபியலுட் கூறுப என நச்சினார்க்கினியர் கூறும் கூற்று, உரைநடை." யென்ன்ன வகை யென்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிது மொன்றுண்டு. அது மரபியலுட்பகுத்துச் சொல்லுதும்' எனவரும் பேராசிரியருரையினை உளங்கொண்டு கூறியதாகும்.