பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக எ <翌<蚤裔了 எனப்படும். முழுவதும் பொய் என்று ஒதுக்கப்படும். நிலையிலன்றி உலகியலாகிய உண்மை நிலையினை ஒருவாற்றால் அறிவுறுத்து வனவாய்க் கேட்போர்க்கு நகைச்சுவை விளைக்கும் உரைநடை "பொருளொடு புணர்ந்த நகைமொழி எனப்படும். பஞ்ச தந்திரக் கதைபோல்வன இவ்வகையில் அடங்குவன. எசு.எ. அதுவே தானும் இருவகைத் தாகும். இனம் பூரண ம் : (இ.ஸ்.) மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு. அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவு ερίτιδ.2 (கசு எ) இஃது அவற்றின் தொகை கூறுகின்றது. (இ-ஸ்) அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய இரண்டும் ஒன்றாகவுந் தொகுக்கப்படும் அவ்வாற்றாற் பயங்கொள்ளுங்கால் (எ-று).3 அவையாவன கூறுகின்றான். (கனச) நச்சினார்க்கி ரிையம் : இது அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய விரண்டும் ஒன்றாகவும் தொடுக்கப்படும்; அவற்றால் பயன்கொள்ளுங்காலத்து. எ-று. 1. அதுவேதாலும் ஓரிருவகைத்தே என்பது பேராசிரியர் கொண்டபாடம் அதுவே தானும் ஈரிருவகைத்தே' என நச்சினார்க்கினியர் உரையிற் கானும் பாடம். எடெழுதினோரால் நிகழ்த்த மாற்றமாகும், அதுவே என்றது மேற்கூறப்பட்டி உரைவகையினை. இருவகையென்றது, மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவுமாகிய இருதிறத்தினை, 2. இனி, இச்சூத்திரத்திலுள்ள அதுவே என்னும் சுட்டு மேற்குறித்த நால் வகையுரை நடையுள் பிற்கூறப்பட்ட பொருளொடுபுணர்ந்த நகைமொழி" யை, சுட்டியதாகக் கொண்டு, அது மகளிர்க்குரைப்பனவும் மைந்தர்க்குரைப்பனவும் என இருவகைப்படும்’ எனப் பொருளுரைத்தலும் பொருந்தும் என்பது, இதனை அடுத்துவரும் நூற்பாவுக்கமைந்த இளம்பூரணர் உரைவிளக்கத்தால் இனிது புலனாகும். 8. மேற்குறித்த உரை வகை நான்கனுள் பாட்டிடைவைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் ஆகியவிரண்டும் ஒருபகுதியாகவும் பொருளொடுபுணராப் பொய்ம் மொழியும் பொருளொடுபுணர்ந்த நகைமொழியும் என்னும் இரண்டும் மற்றொரு பகுதியாகவும் இருவகைபடும் என்பதாம். 4. இது பேராசிரியர் உரையைத் தழுவியமைத்தது.