பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ன ருக "அ இ உ, எ, ஒ என்னுமப்பா லைந்தும்” (தொல், எழுத். நூன். 3) எனவரும். இவை மொழிசிதைத்துத் தனிக்குறிலாய் நேரசை யாயினவாறு காண்க. ஆய்வுரை : இஃது, ஒற்றடாத குற்றெழுத்துத் தனித்து நேரசையாகாது என்கின்றது. (இ-ள்) இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழியின்கண் உள்ள குற்றெழுத்து மொழிசிதைத்து நேரசையெனக் கொள்ளப்படாது எ-று. மொழி சிதைத்தலாவது, குறிலினையாகவும் குறினெடிலாகவும் ஒற்றுமைப்பட்டு இயைந்த குற்றெழுத்தினை மொழி முதற்கண் தனிக்குறிலாகப் பிரித்து அசைத்தல், முதலசை” என்றது இயலசையிரண்டனுள் முதலில் வைத்து எண்ணப்படும் நேரசையினை. மொழி சிதைத்துத் தணிக்குறில் நேரசையாகாது எனவே அது பின்னுள்ள குறிலோடும் நெடிலோடும் இணைந்து குறிலிணையாகவும் குறினெடிலாகவும் நிரையசையாம் எனவும் மொழி சிதையாதவழி நேரசையாம் எனவும் கொள்க. ஈண்டு மொழியென்றது இரண்டிறந்திசைக்குந் தொடர்மொழியினை. எ ஒற்றெழுத் தியற்றே குற்றிய விகரம். இனம் பூரண ம்: என்-எனின். இதுவுமது. (இ~ள்.) குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயல்பிற்று என்ற வாறு.1 அடியினதிடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின் கண் நேரசை என்று ... ... எனவே அலகுபெறாதென்றவாறாம். ஆமன்பக்கத் தொடர்ச்சி ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையும் தனிக்குறில் முதலசை யாகா சுட்டினும் வினாவினும் உயிர்வரு காலை ஒட்ட வரூஉம் ஒருசாரும் உளவே என்றார் மயேச்சுரர் (யா, வி. ) எனவரும் யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூற்று இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 1. குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயற்று எணமுடியும். ஒற்றெழுத்தின் இயல் டாவது அசையாக்குங்கால் எழுத்தென எண்ணப்பெற்று அலகுபெறாமை.