பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள சுஅ இஃது அவற்றது இயல்புணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இதுவும், மேனின்ற அதிகாரத்தான் இறுதி நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கே உரித்து. ஒழிந்த இரண்டானுமாகிய ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து எனவுங் கூறியவாறு.1 தலைமகளை வற்புறுத்துஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியரென்பது இதன் கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற சான்றோருஞ், “செம்முது செவிலியர் பொய்ந்தொடி பகர” என்றாரென்பது ; பிறவும் அன்ன. மற்றும் என்றதனான் அவையன்றி வருகின்ற பிசியுஞ் செவிலியர்க்கு உரித்தென்பது கொள்க. இனி, “பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும்' (485) யாருக்கும் வரைவின்றி வருமாறு அவ்வச்செய்யுளுட் காணப் படும். (கஎரு) நச்சினார்க்கினியம் : இது மேனின்ற அதிகாரத்தான் இறுதிநின்ற இரண்டன்பகுதியுமாகிய ஒன்று செவிலிக்கே யுரித்து. ஒழிந்த இரண்டனா னாகிய ஒன்றும் வரைவின்றி எல்லார்க்கு முரித்து. எ-று. தலைவியை வற்புறுக்கும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுதுபோக்குதற் குரியர் எ-து. இக்கருத்தானே சான்றோர், “செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக் குறியவு நெடியவு முரைபல பயிற்றி யின்னே வருகுவ ரின்றுணை யோரென முகத்தவை மொழியவு மொல்லாள்” (நெடுநல். கரு) 1. உரைநடை நான்கனையும் இருபகுதியாகக் கொள்ளுங்கால் இறுதி. யிலுள்ள பொருளொடுபுணராப் பொய்ம்மொழியும் பொருளொடுபுணர்ந்த நகைமொழியுமாகிய ஒருபகுதி செவிலிக்குரியது எனவும், பாட்டிடைவைத்த குறிப்பும் பாவின்றெழுந்த விளவியுமாகிய ஒரு பகுதி வரைவின்றி எல்லார்க்கும் உரியது எனவும் கொள்க,