பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனல் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்றார் பாட்டினுள். பிறசான்றோரும் 'செம்முகச் செவிலியர் பொய்ந் நொடி பகர” என்றார். மற்றும் என்றதனான் இவையே யன்றி வருகின்ற பிசியுஞ் செவிலிக் குரித்தென்க. இனிப் பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் வரையறையின்றி வருமாறு பலவற்றுள்ளுங் காண்க.! ஆய்வுரை : இது, மேல் இருவகைப்படும் என்ற உரை நிகழ்த்துதற் குரியார் இவரெனக் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் ஒன்று செவிலிக்கு உரியது; மற்றொன்று எல்லார்க்கும் உரியதாகும் எ-று. அவற்றுள், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியும் பொருளொடு புணர்ந்த நகைமொழியும் ஆகிய பிற்கூறு செவிலிக்குரியதெனவும், பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் ஆகிய முற்கூறு வரையறையின்றி எல்லார்க்கும் உரித்து எனவும் கொள்ளுதல் பொருந்தும். இங்ங்ணங் கொள்ளவே, தலைமகளை வளர்க்குஞ் செவிலியர் குடும்பத்திற் பிரிவினாலுளதாகும் வருத்தத்தினைப் போக்கும் நோக்குடன் புனைந்துரைத்து நடுவித்துப் பொழுது போக்குதற் குரியர் என்பது நன்கு புலனாம். இக்கருத்தினால் “செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி” (நெடுதல்-153-154) என நக்கீரனாரும், “செம்முது செவிலியர்............ தன்னிணையாம் பன்னொடிபகர” (பெருங்-1-54-25-32) எனக் கொங்குவேளும் இவ்வுரைவகையினைச் செவிலிக்கு உரியனவாக இயைத்துக் கூறியுள்ளமை காணலாம். எசுகூ ஒப்பொடு புணர்ந்த உவமத் தானுந்: தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே.2 இளம்பூரணம்: என்-எனின். பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. TFಿಥಿನ್ಗ್ பேராசிரியருரையினை அவ்வாறே அடியொற்றி யமைந்திருத்தல் காண்க, 2. பிசிவகைநிலையே என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் காணப்படும் பாடமாகும்.