பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<*莎辦了證。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'முத்துப்போற் பூத்து முதிரிற் களாவண்ண நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு வித்துதிர்த்து" என்பதுமது; இது, கமுகின் மேற்று. "நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னிராடி லூராடு நீரிற்காக் கை” என்பது, தோன்றுவது கிளந்த துணிவினான் வந்தது. இது நெருப்பென்றாவது வகைநிலை யென்ற மிகையான் இவையுஞ் செவிலிக் குரித்தென்பது கொள்க. (எ.கா) நச்சினார்க்கினியம் : இது முறையே பிசி யிரண்டென்கின்றது. தன்கட் கிடந்த வொப்புமைக் குணத்தொடு பொருந்திவரு மாற்றை யுவமப் பொருளானும், இனி யொன்றுகூற வொன்று தோன்றுந் துணிவிற்றாகக் கூறுங் கூற்றானும் என் றிருகூற்ற தாகும் பிசி கூறுபடு நிலைமை. (எ-று.) அவை, “பிறை கவ்வி மலை நடக்கும்” இது ஒப்பொடு புணர்ந்தவுவமம். இது யானையென்றாம். “முத்துப் போற் பூத்து முகிழிற் கிளிவண்ண நெய்த் தோர்க் குருதி நிறங்கொண்டு வித்துதிர்த்து’ என்பது மது. இது கமுகின் மேற்று. "நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னிராடி னுாராடு நீரிற்காக்கை' இது தோன்றுவது கிளந்த துணிவு. இது நெருப்பென்றாம். வகையென்றதனால் இது செவிலிக்கே யுரித்தென்க. ஆய்வுரை : இது, பிசியாமாறு உணர்த்துகின்றது. (முன்பக்கத் தொடர்ச்சி) செய்யானாய பார்ப்பான், எக்காலத்தும் நீராடும் பழக்கமுடையானல்லன். அவன் ஒருகால் நீராடும் நிலையேற்பட்டால் ஊரிலே பறந்து திரியும் நீர்க்காக்கை போற் கரிய நிறத்தின னாவான், தான் நினைத்தபொருள் கேட்பார்க்குத் தெளி வாகத் தோன்றும்படி துணிந்து கூறும் பிசிவகை தோன்றுவது கிளந்த துணிவு எனப்படும், மேற்குறித்த பிசிவகையாகிய உரையாடலை இக்காலத்தார் புதிர் (பிதிர்) எனவும் விடுகதையெனவும் வழங்குவர். 1. பேராசிரியர் உரையைத் தழுவியது.