பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ ம் ఇత్తిళ్లీ 6F fడ (இ.ள்) ஒப்புமைத் தன்மையொடு பொருந்திய உவமப் பொருளும், ஒன்று சொல்ல மற்றொன்று தோன்றுந் துணிவுபட வரும் சொல்நிலையும் எனப் பிசி என்பது இருவகைப்படும். (எ-று.) 'யானை நடக்கும்’ என வெளிப்படக் கூறாது, 'பிறை கவ்வி மலை நடக்கும்’ என உவமானத்தாற் கருதிய பொருள் குறிப்பிற் புலப்பட வைத்தல் ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசி வகையாகும், "நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடின் ஊராடும் நீரிற்காக் கை' என்பது நெருப்பு என்னும் பொருள் குறிப்பிற் புலப்பட அமைந்த சொற்றொடர் நிலையாகும். இது தோன்றுவது கிளந்த துணிவு’ என்னும் பிசி வகைக்கு எடுத்துக்காட்டாகும். பிசி வகையாகிய இவற்றை இக்காலத்தார் பிதிர் (புதிர்) எனவும் விடுகதை யெனவும் வழங்குவர். ள எ ம் நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியு முடைமையும் மென்மையும்? என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது துதலிய முதுமொழி: )யன்ப. இனம் பூரணம் : என்-எனின். முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று (இ - ள்.) நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோ ரன்ன விளங்கவும் தோன்றிக் கருதினபொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழியென்று சொல்லுவர். என்றவாறு. (க எC) G I m SÄffw ist t இது, முதுமொழி யுணர்த்துதல் நுதவிற்று. ஒளியுடைமையும், I , 2. எண்மையும் என்பன பேராசிரியர் கொண்ட பாடங்கள். 3. தாம் சொல்லக்கருதிய பொருளைக் காரணங்காட்டி உறுதிப்படுத்தும் முறையில் அமைவது இப்பழமொழி என்பார். ஏதுநுதலிய முதுமொழி' (செய்-ளருஅ) என அடைபுணர்த்தோதினார். ஏதுநுதலுதல்-காரணமாய் நின்று சொல்லியதனை உறுதிப்படுத்தல், முதுமொழி-பழமொழி.