பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఇఛ్ : శ్రి தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ஸ்.) கூரிதாய்ச் சுருங்கி விழுமிதா யெளிதாகி இயற்றப் பட்டுக் குறித்த பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின், அங்ங்னம வந்ததனைப் பொருண்முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழியென்ப புலவர் (எ-று) “உழுத வுழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால்-வழுதியைக்

  • கண்டன கண்க ளிருப்பப் பெரும்பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு' (பழமொழி) என்றவழி, மற்று வழுதியைக் கண்ட கண் இருப்பத் தோள் பசந்தன என்றக்கால் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்த தென்புழிக் குறித்தபொரு வளியைபின்மை கூறுதலாயிற்று. அதனைச் சொற்றொடர் இனிதுவிளக்கின்றாயினும் முற் கூறிய முதுமொழி முடித்ததென்பது; என்னை? அதன் கண்ணே அது முடித்தற்கேதுவாகிய இயைபின்மை கிடந்தமையினென்பது.1 இது பருப்பொருட்டன்றி நுண்ணிதாகிச் சொற்சுருக்க முடைத் தாய் விழுமிதாகி எளிதிற் பொருடோன்றியவாறு கண்டுகொள்க எனவே, இதுவும் அந்நாற் பகுதித் தென்றவாறு.” (க ைஎ) நச்சினார் க்திரிையம் : இது முதுமொழி கூறுகின்றது. 1. முதுமொழி - பழமொழி, பாண்டியனைக் காமுற்றுக் காணுதலாகிய பிழையைச் செய்த கண்கள் வகுத்தமின்றி யிருக்க அத்தகைய பிழைசெய்யாத தோள்கள் பசலை பரந்து வருத்தமுற்றன. இந்நிலை, உழுதவயலிலுள்ள உழுந்து பயிரை ஊரிலுள்ள கன்றுக்குட்டி மேய்ந்து அழித்தலைச் செய்ய, அதற்குத் தண்டனையாக ஒரு தீமையும் புரியாத கழுதையின் செவியினை அரிந்தாற் போலுந் தன்மையது; என்பது மேற்காட்டிய பழமொழிப்பாடலின் பொருளாகும் கண்கள் செய்த வினையின் பயனை ஒருகுற்றமுஞ்செய்யாத தோள்கள் துகர்ந்தன என்புழிக் குறித்த பொருள்: வினைசெய்தார்க்கும் அதன் பயனை துகர்வார்ககும் இடையேயுள்ள இயைபின்மையினைக் கூறுதலாகும். இக்கருத்தினை வழுதியைக் கண்டன கண்கள் இருப்பப் பெரும்பனைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு' என்னுஞ் சொற்றொடர் தெளிவாக விளக்க வில்லையாயினும் 'உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந்தற்று' என்னும் பழமொழி தன்கண் கிடந்த இயைபின்மை யேதுவாக அதனை முடித்து வைத்தமை அறியத் தகுவதாகும். 2. முதுமொழியாகிய இது பருமையாக வெளிப்படத் தோன்றும் பொருட் டன்றிக் கூர்த்துணரும் நுண்பொருளை யுடையதாதல், சொற்சுருக்க முடைமை, விழுமிய பொருளினதாதல், எளிதிற் பொருள் புலப்படுதல் என்னும் அந்நான்கு" பகுதி யினையுடையது என்பதாம்.