பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எான :) அருை (இ-ள்.) நுண்மையுஞ் ...... தோன்றி எது கூர்மையும், சொற் சுருங்கியிருத்தலும், விழுப்பமும், எளிதிற் பொருள்தெரிதலும் என்ற இந் நான்கும் விளங்கத்தோன்றி. குறித்த .... வரூஉம் எ து அறம் பொரு வரின்பமென்னு மூன்றனுள் ஒன்றை முடித்தற்கு வருமாயின். ஏது.... என்ப எது அங்ங்ணம் வந்ததனை அப் பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதிவரும் முதுமொழி யென்பர் புலவர். எ-று. “உழுத வழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றே-வழுதியைக் கண்ட கருங்க ணிருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு” இதனுள் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்ததெனக் குறித்து அப்பொருளியைபின்மை கூறியதனைச் சொற்றொட ரினிதுவிளங்காதேனும்! முற்கூறிய முதுமொழிக்கண்ணே யப்பொருளை முடித்தற்கேதுவாகிய இயைபின்மை கிடந்து முடிந்தவாறு காண்க. இதனுள் நுண்மை முதலிய நான்குங் காண்க. பழமொழியில்விலக்கணம் பற்றிச் செய்தது..? ஆய்வுரை : இது. முதுமொழியாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ.ஸ்) அறிவின் கூர்மையும், சொற்சுருக்கமும், விழுமிய பொருளை விளக்கும் ஒளியுடைமையும், எளிதிற் பொருள் விளக்கும் எளிமையும் என்னும் இந்நான்கும் விளங்கத் தோன்றிக் கருதிய பொருளை முடித்தற்கு வேண்டும் காரணத்துடன் பொருந்தி வருவது முதுமொழி என்பர் ஆசிரியர் எறு. முதுசொல், முதுமொழி, மூதுரை. பழமொழி என்பன ஒருபொருள் குறித்த பல சொற்களாகும் சென்ற காலத்து வாழ்ந்த பெருமக்கள் வாழ்க்கையிற் புலப்பட்டுத் தோன்றிய நுண்ணறிவு, சொல்வன்மை, உயர்ந்த நோக்கம், நல்வாழ்க்கை நிலையில் அன்னோர் பெற்றிருந்த சிறந்த அநுபவவுணர்வு ஆகிய எல்லாவற்றையும் திரட்டித் தருதல் இம்முதுமொழியின் இயல் 1. விளக்காதேனும் என்றிருத்தல் பொருத்தம் 2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய பழமொழி நானூறு தொல்காப்பியனார் கூறிய ஏதுதுதலிய முதுமொழிக்கு இலக்கியமாக இயற்றப் பெற்றது என்பதாம்.