பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

బ్బ్ ఇన్స్ట్ర தொல்காப்பியம் . பொருளதிகாரம் - உரைவிசி குறைவின்று பயக்கச் சொல்லு மாற்றலுடையார் அவ்வானை யாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும். எது. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க தானேயென்று பிரித்தார், இவை தமிழ்மந்திரமென்றற்கும் மந்திரந்தான் பாட்டாசி யங்கத மெனப்படுவன வுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க. அவை, -4 * * 姆罗 "ஆரிய நன்று . . தீர்க்க சுவா “முரணில் பொதியின் ... ... ஆனந்தம் சேர்க்க சுவா” இவை தெற்கில் வாயில்திறவாத பட்டிமண்டபத்தேல் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாக வெனச் சவித்தற் பொருட்டாய்வந்த மந்திரம் பாட்டாய்வருதலின் அங்கதமாயிற்று இதனான் 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ (திருக். உஅ) என்றார். 1 ஆய்வுரை : இது, மந்திரம் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ஸ்) நிறைமொழி மாந்தராகிய பெரியோர் இவ்வாறு ஆகுக' எனத் தமது ஆணையிற் கூறப்பட்டு அவ்வாற்ற லனைத் தும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் என்று கூறுவர் பெரியோர் எ.று 'நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி' என்பர் பரிமேலழகர். திறைமொழி மாந்தராவார், யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் நீக்கி ஐம்புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையோராய் வாழும் செம்புலச் செல்வராவர். ஆணையிற் கிளத்தலாவது இஃது இவ்வாறு ஆகுக எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். “மறைமொழி யென்பது புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர்” என்பர் பேராசிரியர். இனி, மறைமொழி யென்பதற்கு, நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனப்பொருள் கொள்ளுதலும் 1. பேராசிரியர் உரை நோக்குக.