பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பேதைமை யென்ப தியாதென வினவின் ஒதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல்.” இதன்கட் குற்றியலிகரம் அலகு பெறாதவாறு காண்க.1 (எ) இஃது, எய்தாத தெய்துவித்து ஐயம் அறுத்தது. (இ - ள்) மேற்கூறிய எழுத்திலக்கண வகையானும் ஈண் டோதும் அசைக்குறுப்பா மாற்றானும் எல்லாங் குற்றியலிகரம் ஒற்றெழுத்தியற்றேயாம் (எ - று). தேற்றேகார மடுத்துக் கூறியவாறு. எனவே எழுத் தோத்தினுண், மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல்’ (தொல்-எழுத்-புண-2) எனக் கூறிக், 'குற்றிய லுகரமு மற்றென மொழிப' (தொல். எழுத் புண-3) எனக் குற்றுகரத்திற்குப் புள்ளிபெறுதலுங் கூறினான்; அது போலக் குற்றிகரமும் புள்ளிபெற்று நிற்றல் உடைத்தெனவும் ஈண்டுக் குற்றுகரம் நேர்பும் நிரைபுமாகியவாறு போலத் தானும் ஒர் அசையாகுங் கொல்லென்று ஐயுறுவது வேண்டா, ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும் ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையு முடைத்து என்ற வாறுமாயிற்று. எனவே, ஒற்றெழுத்தியற்றாயினுங் குற்றுகரம் 1. பேதைமை யென்ப தியாதென வினவின் எனவரும் ஆசிரிய அடியில் "தியாதென எனத் தகரவொற்றின் மேல்நின்ற குற்றியலிகரம் ஒற்றுப்போன்று அலகுபெறாமையால் தியாதென என்னுஞ்சீர் நேர்நிரை (கூவிள) என்னும் வாய்பாட்டோசையினதாய் நின்றமை செவி கருவியாகக் கூறிக்காண்க. 2. சார்பெழுத்தினுள் ஒன்றாகிய குற்றியலிகரம் முற்குறித்த எழுத்திலக்கண வகையாலும் இவ்வியலிற் கூறப்படும் அசைக்குறுப்பாம் நெறியினாலும் ஒற்றெழுத்தின் தன்மையதே எனத் தெளிவுபடுத்தும் முறையில் குற்றிய லிகரம் ஒற்றெழுத் தியற்றே எனத்தேற்றேகாரமடுத்துக்கூறினார். மடுத்துக் கூறுதல்இயைத்துச் சொல்லுதல். 3. குற்றிகரம் ஒற்றெழுத்தின் இயல்பினதே என்றதனால் குற்றியலிகரம் ஒற்றுப்போலப் புள்ளி பெறுதலும், ஒற்று நின்றாற்போல நின்று இயலசையுரி. பசைகளைச் சார்ந்து வருதலும் ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையும் உடைத்து என்பதாம் .