பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - ன்எக =ః శత్రి பொருந்தும். இங்கனம் சான்றோர் எண்ணிய வண்ணம் செயற் படுதற்குரிய ஆற்றல் முழுவதும் தன்கண் வாய்க்கப்பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார் இதனை வாய்மொழி' (செய் 75) என்ற பெயரால் தொல்காப்பியனார் முன்னர்க் கூறிப்போந்தார். இத்தொல்காப்பிய நூற்பாவின் சொல்லையும் பொருளையும் அடியொற்றியமைந்தது, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் எனவரும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாய்மொழியாகும். இறைவன் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார், 'எந்தை நனிபள்ளியுள்க வினைகெடுதலாணை நமதே (2-84-11) எனவும், ஆனசொன்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணைநமதே (2-85-11) எனவும் தம்மேல் ஆணையிட்டும், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ (1-16-1)என இறைவனது திருநீல கண்டத்தின் மேல் ஆணையிட்டும் ஒதிய திருப்பதிகங்களும் அப்பூதியடிகளார் மூத்த மைந்தன் அரவு தீண்டி இறந்தானாக அவனை உயிர்ப்பிக்கும் அருட்குறிப்புடன் ஒன்றுகொலாம்' (4-18.1-10) எனப் பாடிய திருப்பதிகமும் நிறைமொழி மாந்தர் ஆணையின் ஆற்றலை நன்கு புலப்படுத்துவனவாகும். வாய் மொழி’ என்பது மந்திரத்திற்கு வழங்கும் மற்றொரு பெயர் திருவாய்மொழி, திருமொழி, திருவாசகம் என்ற பெயர்கள் வாய்மொழி என்ற பெயர் வழக்கத்தை அடியொற்றியமைந் தனவாகும். "ஆரியம் நன்று ... ... செந்தமிழே தீர்க்க சுவா” எனவும், “முரணில் பொதியின் - ... ஆனந்தஞ் சேர்க சுவா” எனவும், இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின’ எனப் பேராசிரியர் காட்டிய அங்கதப் பாடல்கள் ஆணையிற்கிளந்த மறைமொழியின் பாற்படுவன. இவை, தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள. அங்கதப்பாட்டு அல்லாத மறை