பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என உ ఇజ్జతీఱి டே சிரியரும் : இது, முறையானே கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துதல்’ துதலிற்று. (இ-ஸ்) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொல் தொடர்ந்த வாற்றானும் சொற்படு பொருளானுஞ் செவ்வன் பொருளறிய லாகாமையின், எழுத்தொடுஞ் சொல்லோடும் புணராது பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்பாவது (Gr-gy). இதனைப் ‘பாட்டுரை நூல்’ என்ற வழி வாய்மொழி என் றோதினான், கவியாற் பொருள் தோன்றாது பின்னர் இன்னதிது வெனச் சொல்லி உணர்த்தப்படுதலின். இனி. அதனை இதன் தொகைச் சூத்திரத்துக் கூற்றிடை வைத்த குறிப்பென்று (477) ஒதினான் பாட்டிடைப் படுபொருள் பெரிதாகி அதனிடையே குறித்துக்கொண் டுனரினல்லது மெய்ப்படா தென்றற்கென்பது. பிறர் அவற்றைப் பொருளிசையென்று சொல்லுப, ! 'குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கின. ராம்.” என வரும். இதனுட் குடமே தலையாகப் பிறந்தாரெனவுங் கொம்பெழுந்த வாயின ரெனவுங் கையுட்கொண்ட மூக்கின. ரெனவுங் கூறியக்கால் எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பிலவாதலுங் குறிப்பினான். அதனைக் குஞ்சரமென்று கொண்ட வாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. 1. எழுத்து முடிந்த முறையாலும் சொல்தொடர்ந்த நெறியாலும்சொல்லின் கண் தோன்றும் பொருளாலும் நேரேபொருளுணர முடியாதவாறு எழுத்தொடுஞ் சொல்லொடும் தொடராது பொருட்குப்புறத்தே தோன்றும் பொருளுடையதாய் நிற்பது குறிப்பு:மொழியாகும். இது, கவியாற்பொருள் தோன்றாது பின்னர் இன்னபொருளுடையது இத்தொடர் என வாய்மொழியாற் சொல்லியுணர்த்தப் படுதலின் பாட்டுரைநூல் என்னுஞ் சூத்திரத்தில் இதனை "வாய்மொழி என்ற பெயராற் குறித்தார் தொல்காப்பியனார். இனி இக்குறிப்பு மொழியினையே அடிவரையில்லன ஆறையுந் தொகுத்துக்கூறும் செய்யுளியல் விசிரு ஆம சூத்திரத்துக் கூற்றிடைவைத்த குறிப்பு எனக் கூறினார். பாட்டின்கண்ண்ே தோன்றும் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக்கொண்டுணர்ந்தாலல்லது அக்குறிப்பு வெளிப்படா தென்றற்குக் கூற்றிடைவைத்தகுறிப்பு என்றார். ஆசிரியர். இக்குறிப்பினைப் பிற நூலாசிரியர் பொருளிசையென்பர்.