பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஆகிச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ.ஸ்) பாட்டின்கண் கலந்த பொருளையுடையனவாகிப் பாட்டுக்களின் இயல்பையுடையன பண்ணத்தியெனப்படும்(எ-று) "பண்னைத் தோற்றுவித்தலாம் பண்ணத்தி யென்றார்; அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன” என்பர் இளம்பூரணர். 'பாட்டிடைக் கலந்த பொருளவாகி என ஆசிரியர் கூறுதலால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாகச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட்களாகிய இவ்விசைப் பாடல்களுக்கும். உரியன. என்பதும், பாட்டு எனக் கூறாது பாட்டின் இயல என்றாமையால் இயற்ற மிழ்ப் பாடல்களுக்கு உரியனவாக முற்கூறப்பட்ட நோக்கு முதலிய செய்யுளுறுப்புக்கள் சிலவற்றை இல்விசைப் பாடல்கள் பெற்றேவருதல் வேண்டும் என்னும் வரையறையில்லை யென் பதும் நன்கு விளங்கும். பண்ணத்தி என்பது, எழுத்து வடிவம் பெறாது நாட்டிற் பொதுமக்களிடையே வழங்கும் நாடகச் செய்யுள் வகையெனப் பேராசிரியர் தரும் விளக்கம் கூர்ந்துணரத்தகுவதாகும். எனச அதுவே தானும் பிசியொடு மானும். இாைம்பூரணம் : என்-எனின். மேற்சொல்லப்பட்டதனுள் ஓர் உதாரணம் உணர்த்துதல் துதலிற்று. (இன்.) மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடொத்த அளவிற்று என்றவாறு. பிசியென்பது இரண்டடி அளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப்படும். உதாரணம் 'கொன்றை வேய்ந்த செல்வன் அடியை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே” 1. பிசி என்பது இரண்டடியான்வருவது என்பது தம்காலத்து எல்லார்க்கும் புலனாதலின் பண்ணத்தியும் பிசிபோன்று இரண்டடிச் சிற்றெல்லையதாய் வரும் என்பர், ரு + அதுவே தானும் பிசியொடு, மானும் என்றார். அது என்றது மேற் குறித்த வண்ணத்தியை, மானும்-ஒக்கும். -