பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள எரு <姆、9鲇剑 'நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி நிறைமலர்சாந் தொடுபுகையும் நீரு மேந்தி வீடற்குந் தன்மையின் விரைந்து சென்று விண்ணோடு மண்ணிடை நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்குந் தக்க தொல்சீர்ப் பகவன்ற னடியிரண்டும் பணிது நாமே” என வரும்.! (யாப். வி. ப உக ச) அவ்வழி ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைத் தென ஒரு சாரார் உதாரணங் காட்டுமாறு: 'கன்று குணரிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்று நம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி: கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.” (சிலப். ஆய்ச்சி.) இவை மூன்றடியான் மூன்றடுக்கிவந்த ஆசிரியத் தாழிசை யென்றவாறு. இவை அளவடியான் வருதலானும் ஒத்து மூன்றாகி. வருதலானும் இவ்வாசிரியர் மதத்தால் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சக வொருபோ கெனப்படும். மேற்காட்டியதே ஆசிரியத்தாழிசை,3 இனி, வஞ்சித்தாழிசையாவது குறளடி நான்கினால் ஒருபொருள் மேன் மூன்றடுக்கி வரும்: 1. மூன்றடி ஒத்து வருவது ஆசிரியத் தாழிசையெனப்படும். 2. இவை மூன்றடியான் மூன்றடுக்கி அளவடியான்ஒத்து மூன்றாகிவரும் நிலையில் தொல்காப்பியனார் கொள்கைப்படித் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சகவொருபோகெனக்கொள்ளப்படும். நீடற்கவினையென்று' என்ற முதற் குறிப்புடைய பாடலே பாவினத்துள் ஒன்றாய ஆசிரியத் தாழிசையாகும், என்பர் இளம்பூரணர். 3. குறளடி நான்கினால் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசையாகும்.