பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எனரு அர்க் இ. "இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ நுரைக்க ளென்னுமக் குழம்புகொண் டெதிர்ந்தெழ நுடங்கிய விலயத்தால் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே' (சூளாமணி, கல்யாண ருக) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. இனி வஞ்சிவிருத்தமாவது முச்சீரடி நான்காகி வரும் அது “இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேல்தடங் கையினாய்’ (சூளாமணி, சீயவதை கள0) என வரும். இனி, வெளிவிருத்தமாவது நான்கடியானாயினும் முன்றடி. யானாயினும் அடிதொறுந் தனிச்சொற் பெற்றுவரும். அது, “ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் . ஒருசாரார் கூ கூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் . ஒருசாரார் என வரும். இது நான்கடியான் வந்தது. மூன்றடியான் வருவது வந்தவழிக் காண்க. இனிக் கலிவிருத்தமாவது நாற்சீரடி நான்கினால் வரும், 'தேம்பழுத் திணியநீர் மூன்றுந் தீம்பலா வேம்பழுத் தளித்தன சுளையும் வேரியம் மாம்பழக் கனிகளு மறுத்தண் டிட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே” என வரும். (சூளாமணி. நகர. கச)