பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - தூற்பா எரு அகூரு ஆகும்’ என்றதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறுமென்பது. ஈராறாகும்’ என்றதனான் இது நெடுவெண்பாட்டாகி வருமெனவும் அதுபோல ஆறடியின்

  • }

இழிந்து வாராதெனவுங் கொள்க ! (கஅசு) அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே. இதுவும் அது. (இ-ள்) அது முழுதும் அடியாகி வராது இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும் (எறு).3 அவை, முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையிற் காட் டாமாயினாம். இக்காலத்துள்ளனவேற் கண்டுகொள்க. இலக் கணம் உண்மையின் இலக்கியங் காணாமாயினும் அமையு மென்பது. (கஅங்.) ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) பண்ணத்தி யென்னும் இசைத்தமிழ்ப் பாடல்களின் அடிப்பெருக்கம் பன்னிரண்டாகும். அவை நாற்சீரின் எல்லையினைக் கடந்து மிக்கும் குறைந்தும் வரினும் நீக்கப்படுதல் இல்லை எ-று. 1. அடிநிமிர் கிளவி-அடியின் பெருக்கம். எனவே ஈராறு என்னும் தொகை அடியளவினைக் குறித்ததாகக் கொண்டார் பேராசிரியர். 2. தெடுவெண்பாட்டு : பஃறொடைவெண்பா, நெடுவெண்பாட்டு வடிவில் வரும் பண்ணத்தி ஆறடியிற் குறைந்து வாராது என்பதாம். 3. அடியிகந்து வருதலாவது, பாட்டுமுழுவதும் அடியமைப்புப் பெற்று வாராது இடையிடையே அடியாம் உறுப்பினைப் பெற்றும் அல்லாதவிடங்களி. ளெல்லாம் அடிவரம்பினைக் கடந்து பரந்துபட்ட உரைத்தொடர்களாகியும் வருதல். அவ்வியல்புடைய பாடல்கள் முற்காலத்துள்ளார் செய்யுட்களிற். காணப்படாமையின் இங்கு அவற்றுக்கு உதாரணம் காட்டப்பெறவில்லை. இக்காலத்துள்ளனவேல் அவற்றை இதற்குகிய உதாரணமாகக்கொள்க. அத்தகைய பாடல்களுக்குத் தொல்காப்பியமாகிய இந்நூலில் இலக்கணம் உண்மையால் இலக்கியங்காணாது போயினும் அவ்வாறு மீண்டும் படைத்துக்கொள்ளப்பெறின் இலக்கியமாக அமையும் என்பதாம்.