பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என சு = శ్రీడ. 6T வகுத்துக் கூறிய பாவினப் பாகுபாடு அன்னோர் கருதுமாறு இயற்றமிழுக்குரியதன்றி இசைத்தமிழுக்கே யுரியதென்பதும் “பண்ணத்தி யெனினும் பாவினம் எனினும் ஒக்கும்’ எனவரும் இளம்பூரணருரைத் தொடரால் நன்கு துணியப்படும். ள எசு. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே அனைவகைப் படுமே. இாைம் பூரணம் : என்- எனின். மேற்சொல்லப்பட்டன. தொகுத்து உணர்த்து தல் துதலிற்று. (இ-ள்) ஈண்டுச் சொன்ன வகையினாற் சொல்லப்பட்டன வற்றை யாராயுங்காலத்து அவ்வியல்வகை யத்துணைப் பாகு படும் என்றவாறு.1 இதனாற் சொல்லியது செய்யுளாவது அடிவரை யுள்ளனவும் அடிவரை யில்லனவுமென இருவகைப்படுமென்பது உம் அடிவரை யுள்ளன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கவி எனவும்; தாழிசை, துறை. விருத்தமெனவும்; அடிவரையில்லன, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு:மொழி என அறுவகைப் படுமென் பது உம் உணர்த்தியவாறு. அஃதேல், மேல் அளவியல் வகையே அனைவகைப் படுமே” என்ற சூத்திர மிகையாதல் வேண்டுமெனின், அது பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது; இது செய்யுள் இணைத்தென வரையறுத்துணர்த்திற்று.2 (கன் ச) டே சிரியம் : இதுவும் மேலவற்றுக்கெல்லாம் புறனடை, (இ- ள்). எடுத்தோதிய வகையாற் சொல்லியன ஆராயின் அளவியற் பகுதி அக்கூற்றதாம் (எ-று) . 1. ?ສ. வகையாவது ஒன்றினொன்று கிளைத்துத் தோன்றி இயலும் கூறுபாடு. கிளந்தன-மேற்கூறப்பட்டன. தெரியின்-ஆராயின். 2. இவ்வியலில், அளவியல் வகையே யனைவகைப் படுமே என முன்னர் வந்த ள்சி ரு-ஆம் சூத்திரம் பாவிற்கு அடிவரையறுத்துக் கூறியது. எனகள் ஆம் சூத்திரமாகிய இது, எழுநிலத்தெழுந்த செய்யுள் இனைத்தென வரையறுத் துணர்த்திற்று. ஆதலின் அது மிகையன்று என்பதாம். 3. கிளரியல்வகை - எடுத்துக்கூறியவகை. கிளந்தன - கூறப்பட்டன. தெரிதல்-ஆராய்தல். அளவியல்வகை அளவியலாகிய பகுதி, அனைவகைப்படும்மேற்குறித்தவாறு இருகூற்றதாகும்.