பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவும் இவை ஒற்றியற்றாகாது எழுத்தியற்றாயினவென்று காட்டுவாருமுளர். முந்தியாய் என்பது இகர வீறுமாமாகலின் அது காட்டல் நிரம்பாது. அல்லது உம் அவை சான்றோர் செய்யு ளல்லவென மறுக்க. இனி, ஒற்றும் எழுத்துமென உம்மையோ டெண்ணலுமாகாது; இவ்வோத்தினுள், 'உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ (தொல். செய். 44) என ஒற்றினையும் எழுத்தென்றானாகலின்.1 நச்சினார்க்கினியம்: இது குற்றியலிகரம் அலகுபெற்றும் அலகுபெறாதும் வரும் என்கிறது. (இ-ள்.) குற்றியலிகரம் ஒற்றியற்று எழுத்தியற்று எ - து குற்றியலிகரமாவது ஒற்றியல்பினையுடைத்து: அதுவேயன்றி, எழுத்தியல்பினையும் உடைத்து. எ~று. என்றது அலகுபெறாதவழி ஒற்றாம்: அலகுபெற்றவழி யெழுத்தாம் என்றவாறு. உ-ம் : "குழலினி தியாழினி தென்ப" (திருக்குறள் 66) என ஆசிரியத்தளையாயும் 'அருளல்ல தியாதெனின்' (திருக்குறள் 256) எனக் கலித்தளையாயும் வருதலிற் குற்றியலிகரம் அலகுபெறாது ஒற்றியற்றாயிற்று. "நினக்கி யாரே மாகுது மென்று வனப்பு நினக்கியா னுரைப்பக் கேண்மதி' 1. 'ஒற்றெழுத்து' என்பதனை உம்மைத் தொகையாகக்கொண்டு குற்றிய லிகரம் ஒற்றியற்று, எழுத்தியற்று, எனப் பிரித்துக்கூட்டிக் 'குற்றியலிகரமாவது ஒற்றியல்பினையுடைத்து: அதுவேயுமன்றி எழுத்தியல்பினையும் உடைத்து’’ எனப்பொருள் கூறுவாரை மறுக்கும் முறையில் அமைந்தது, இவ்வுரைத்தொடாாகும். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள உயிரும் மெய்யும் ஆகிய முப்பதும் எழுத்தெனப்படுப எனத் தொல்காப்பியனார் தெளிவாகக் குறிப்பிடுதலால், அவ்வெழுத்துக்களுள் உயிரினை மட்டும் எழுத்து என்ற பெயராலும் மெய்யினை ஒற்று என்ற பெயராலும் வேறுபடக் கொள்ளுதல் பொருந்தாது எனவும் , உயிர்த்திறமியக்கம் இல்லாத ஒற்று முதலியவற்றை உயிரில்லெழுத்தும்' என எழுத்து என்ற பெயரால் ஆசிரியர் கட்டிக்கூறலால் எழுத்து என்பது உயிர்கட்கு மட்டுமன்றி உயிரல்லாத ஒற்றுக்களையும் குறித்து வழங்கும் பொதுப்பெயரெனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும்.