பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉః శf தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் யென்ற எழு நிலனும். முறை......வகையின் எ-து, அவற்றிற்கு முறைமை வழியாற் புறமென அடைத்த வெட்சிமுதற் பாடாண் பகுதி பீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற் .....வே எ-து, முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட் குறுப்பாய் நிற்கும். எ-று. எனவே, அகமேழும் புறமேழும் அவ்விரண்டற்கும் பொதுவாகிய கரந்தை யொன்றுமாகப் பதினைந்தனுள் ஒன்று செய்யுட்குறுப்பாயல்லது வேறுறுப்பின் றென்றவாறாயிற்று.' ஆய்வுரை : இது திணையாமாறு இதுவென வுணர்த்துகின்றது. செய்யுட்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகிய திணையென்பது, செய்யுளிற் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுபடுத்து அறிதற்குரிய கருவியாகும். (இ-ள்) கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை எனக் கைக்கிளை முதலாகப் பெருந். திணை யிறாகவுள்ள ஏழு திணைகளும் முறையே மேற்சொல்லப். பட்டன எ-று. முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண்திணை கைக்கிளைப்புறம், வஞ்சி முல்லைப்புறம், வெட்சி குறிஞ்சிப்புறம், வாகை பாலைப்புறம், உழிஞை மருதப்புறம், தும்பை நெய்தற்புறம், காஞ்சி பெருந்திணைப்புறம் என முன்கூறிய வகையே கொள்ளுதல். இங்ங்ணம் அகமும் புறமும் எனத்திணைகளை ஒன்று படுத்தவே பதினான்கு திணையும் ஏழு திணைகளாகி. படங்கின. ள எஅ காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் 2 பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு ? மறையென மொழிதல் மறையேகர் ஆறே. இளம்பூரணம் : என்-எனின், கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்து தல் துதலிற்று. 1. Gusrisrofuts; உரையைத் தழுவியது. .ே இடந்தலைப்பாடு, எனவும், 3. சார்பொடு, எனவும் பாடங்கொள்வர் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்