பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - துாற்பா எ1ள் அ శ్రీ iffL பாடு நிகழாதாம் பிறவெனின், அற்றன்று; யாழோக் கூட்டம் உலகிய வாகாதாதலான் இல்லதன்றாமாகவே உலகத்தார் நிறை யுடையாராகி மறை வெளிப்படாமல் ஒழுகுவாரும் மறைவெளிப் படுத்து விளம்பும் பாங்கனையுடையாரும், இல்லாதாருமெனப் பலவகையராதலின் வினாதல் ஒருதலையன்றென்பது: அல்லதுாம் இடந்தலைப்பாடு நிகழாதாயினன்றே துணைவேண்டுமென்பது. என்னை? துணையின்றி நிகழுங் களவு சிறப்புடைத்தாகலாலும் பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத்தொழு குமாகலானு மென்பது. களவொழுக்கமெல்லாம் இந்நான்கு வகையானும் அடங்கும். அவற்றுக்குச் செய்யுள், "கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது தெழி இய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே” (குறுந்: 2) என்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள். "சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்கு த லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புவிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல நண்ணா ராண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்ன நின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே’ என்பது, இடந்தலைப்பாடு. (நற்றிணை: 39) 'இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே'(குறுந்:58) என்பது பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது.