பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளாக ஒழுக்கமாகலான், அங்ங்ணமாயினும் அவற்றையுங் கைகோளின் பாற் சார்த்தியுணரப்படுமென்றற்கு ஈண்டுக் கூறினானென்பது. இனிக் கூறும் ஐந்துந், தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். முன்னைய இரண்டும் போலப் பிறர் கொடுக்கப்பட்டன அல்லவென்பது.? மலிதலென்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய வற்றான் மகிழ்தல், புலவியென்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடா மற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழி யானன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ங்னம் ஊடனிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய பொரு ளின்மை யுணர்வித்தல் உணர்வெணப்படும். இல்லது கடுத்த மயக்கந்திர உணர்த்துதலால் உணர்த்துதலெனவும் அதனை உணர்தலால் உணர்வெனவும்படும்: புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா, அது குளிர்ப்பக் கூறலுந் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான். நீங்குதலின் அம்முறையானே கூறி அவற்றுப் பின் பிரிதல் கூறினான். அஃது இவை நான்கனோடும் வேறு படுதலின் அதனை ஊடலோடு வைக்கவே அவ்வூடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற் படுமென்பது உங் கொள்க; என்னை? காட்டக் காணாது கரந்து மாறுதலின். இவற்றுக்குச் செய்யுள்; 1 , மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும் ஆகியன தலைவன் தலைவி யென்னும் இவரொழுக் கமன்றிச் சுற்றத்தாரும் வேள்வியாசான் முதலாயினாரும் செய்விக்கும் ஒழுக்கமாயினும் அவற்றையும் காதலர் இருவர்க்குரிய ஒழுகலாற்றிற் சார்த்தியுணரப்படும் என்பதற்கு இவ்வியலிற்கூறினார் தொல்காப்பியனார். 2. இனிக்கூறும் ஐந்தாவன: மலிவு, புலவி, ஊடல். உணர்தல், துணி என்பன. முன்னைய இரண்டாவன: மறை வெளிப்படுதல், தமரிற் பெறுதல். 3. அதற்கு ஏதுவாகிய பொருள் இன்மை உணர்வித்தல் - தலைமகள் தன்ளோடு ஊடுதற்குக் காரணமாகிய செயல்கள் தன்னால் நிகழ்த்தப்படவில்லை என்பதனைத் தலைமகள் மனங்கொள்ளும்படித் தலைவன் தலைவிக்கு உணர்த்து தலும் தலைவி அதனை மனத்துட்கோடலும் உணர்வெனப்படும். புலவி. சிறுபிணக்கம். குளிர்ப்பக்கூறல்-தலைவியின் மனம் குளிரும்படி இன்னுரை மொழிதல். தளிர்ப்பமுயங்கல் -அவளது மேனியின் வாட்டம் தவிர்ந்து குளிர்ச்சியடைந்து பொலிவுபெறுமாறு அவளைத் தழுவிக்கொள்ளுதல், துணி என்பது ஊடலின் ثبت ۹