பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ டுரு என இக்குற்றியலிகரங்கள் அலகுபெறுதலின் எழுத்தியற்றாயிற்று. இங்ங்ணம் சான்றோர் செய்யுள் வருதல் பெருவரவிற்று.1 ஒற்றினையும் எழுத்தென்று ஒரோரிடத்துக் கூறினாரேனும், ஈண்டு ஒற்று எழுத்து எனக்கூறலின் ஒற்றல்லா வெழுத்தை யுணர்த்திற்று.2 ஆய்வுரை : இஃது அசைகொள்ளுந்திறத்தில் முற்கூறப்படாத குற்றியவிகரத்தின் நிலை உணர்த்துகின்றது. (இ-ள்) குற்றியலிகரம் ஒற்றெழுத்தின் இயல்பினது என்பர் ஆசிரியர் எ-று. எனவே, சார்பெழுத்துள் ஒன்றாகிய குற்றியலிகரம் ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்துவருதலும், ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையும் ஆகிய இருநிலைமை யும் ஒருங்குடையது என்பது பெறப்படும். குற்றியலிகரம், "குழவினி தியாழின தென்ப" (திருக்குறள் 66) என ஒற்றின் தன்மையதாய் நின்று அலகு பெறாமையும், "மற்றியா னென்னுளேன் கொல்லோ" (திருக். 1206) 1. குற்றியலிகரம் ஒற்றின் தன்மையதாய் அலகு பெறாமலே வரும் என்பது பேராசிரியர் கருத்தாகும். இக்கருத்தினால், முத்தியாய் பெய்தவளை கழலும்’ என்றாங்குக் குற்றியலிகரம் அலகு பெற்றுவரும் பாடல்களைச் சான்றோர் செய்யுள் அல்ல எனப் பேராசிரியர் மறுத்துள்ளமை காணலாம். குற்றியலிகரம் எழுத்தின் தன்மையதாய் அலகு பெறுதல் உண்டென்பது சங்க விலக்கியம், திருக்குறள், திருச்சிற்றம்பலக்கோவை முதலிய சான்றோர் செய்யுட்களிற் பெரு வர விற்றாய்க் காணப்படுகின்றது. எனவே குற்றிய லிகரம் ஒற்றாந்தன்மையினையும் எழுத்தாய் அலகிடப்பெறுந் தன்மையினையும் ஒருங்கு உடையது என்பதனைப் புலப்படுத்தும் முறையில் ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்' எனவரும் நூற்பா வினைக் குற்றியலிகரம் ஒற்றியற்று, எழுத்தியற்று' என இருதொடராகப் பகுத்துரைத்தார் நச்சினார்க்கினியர். 'குற்றியலிகரம் அலகு பெறாதவழி ஒற்றின் தன்மையது; அலகு பெறும் வழி எழுத்தின் தன்மையது' என்பது இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கண்ட புதுப்பொருளாகும். 2. ஒற்றினையும் எழுத்து' என ஆசிரியர் கூறினாராயினும் செய்யுளில் அலகிடப்பெறாமையும் அலகிடப்பெறுதலும் ஆகிய தன்மை பற்றி முறையே 'ஒற்று' எனவும் எழுத்து' எனவும் பகுத்துக் கூறினமையால் இச்சூத்திரத்து எழுத்து' என்றது, ஒற்றல்லாத எழுத்தினை என்பது நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கமாகும்.