பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'விரிதிரைப் பெருங்கடல்” (குறுந்ாக(க) இது மலிதல், "நாணுக் கடுங்குரைய ளாகிப் புலவி வெய்யணா முயங்குங் காலே' இது புலவிநோய். "நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமை பெறுகற்பின்’ (கலி எ எ} இஃது ஊடல் ‘விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி' (கலி எரு) இஃது உணர்தல், 'திறனல்ல யான்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன்' ) به G - ویتی( இது துணி, துணித்தல் வெறுத்தல். பிரிவெனவே ஆறுமடங்கும். அவை முன்னர்க் காட்டினாம். ஆய்வுரை : இது, கற்பென்னும் கைகோளாமாறு கூறுகின்றது. (இ-ள்) (ஒத்த அன்பினராகிய தலைவன் தலைவி இருவரும்) மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு வெளிப்படுதலும், தலைவியின் சுற்றத்தார் கொடுப்பத் தலைவியைத் தலைவன் கரணவகையாற் பெறுதலும் என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தவறாது மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவற்றுடன் கூடி வருவது கற்பு என்னும் ஒழுகலாறாகும் எ-று. மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் என முற்கூறிய இரண்டும் ஆசான் முதலியோர் செய்வித்தலின் பிறரொடுபட்ட ஒழுகலாறெனப்படும். மலிவு முதலிய ஐந்தும் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனும் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே கொள்ளப்படும். மலிதல் என்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய மனைவாழ்க்கை நிகழ்ச்சிகளால் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்