பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీశ్రీr தொல்காப்பியம் -- பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்) பார்ப்பான், பாங்கன், தோழி. செவிலி, தலைவன், தலைவி எனச் சொல்லப்பட்ட அன்பினால் அளவளாவும் மர பினையுடைய அறுவகையோரும் களவு என்னும் ஒழுகலாற்றிற் கூற்று நிகழ்த்துதற்கு உரியராவர் எ-று. நன்றுந் தீதும் ஆராய்ந்து தலைமகற்கு உறுதி கூறுவான் பார்ப்பான் எனவும், அவ்வாறன்றித் தலைமகன்வழி ஒழுகுவான் பாங்கன் எனவும் இவ்விருவரிடையே யமைந்த வேறுபாட்டினைக் குறிப்பிடுவர் பேராசிரியர். எஅ.உ பாணன் கூத்தன் விறவி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகை இத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். இளம்பூரணம் : என் - எனின், கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவருங்கூடப் பன் னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு : 1. கிளவியொடு' என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம், 2. அன்புடையராய் மனைவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள எல்லோர்க்கும் அன்பினால் அறிவுரை பகர்ந்து நன்னெறிப் படுத்தும் அன்புடைய பெருமக்களே அறிவர் எனப் போற்றப் பெறுவர் என்பார். ஆணஞ்சான்ற அறிவர் என அடை புணர்த்தோதிானர் தொல்காப்பியனார். ஆணம்-அன்பு. ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி’ எனவருங் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆணம் என்பது நேயம் என்னும் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க. யாவராலும் ஆதரித்துப் பாதுகாக்கத்தக்க கல்விச் சிறப்புடன் விளங்கியவனே பார்ப்பான் என்பது புலப்படுத்துவார் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான்' என்றார். மணம்புரிந்து மனையறம் நிகழ்த்தும் ஆணும் பெண்ணுமாகிய காதலர் இருவரிடையே வழிவழியாக நிலைபெற்றுவரும் கலங்கர் நிலைமையாகிய ஒருமை வழிப்பட்ட மனத்திண்மையே கற்பு எனப்படும் என்பார் தொன்னெறி மரபிற் கற்பு’ என்றார். களவிற்குரிய பாணன் முதலிய அறுவரோடு பார்ப்பான் முதலிய அறுவரும் கூடக் கற்பின்கண் கூற்று நிகழ்த்தற்குரிய வாயில்கள் பன்னிருவர் என்பதாம்.