பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள அஉ ஆ) தி இ 'மரந்தலை மணந்த நனந்தலைக் கானத் தலந்தலை ஞெமயத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லணி னினிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர் வன்பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந்தண் ணியளா நோகோ யானே' (நற்றிணை-க கச) இது கண்டோர் கூற்று. "விதையர் கொன்ற முதையற் பூழி யிடுமுறை நிரம்பிய வீரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை யரலை யங்காட் டிரலையொடு வதியும் புறவிற் றம்மநீ நயந்தோ ளுரே யெல்லி விட்டன்று வேந்தெனச் சொல்லுபு பரியல் வாழ்கநின் கண்ணி காண்வர விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க வேறித் தண்பெயல் கான்யாற் றிடுமணற் கரையிறக் கொழிய வெல்விருந் தயரு மனைவி மெல்லிறைப் பனைத்தோட் டுயின்மா போயே’ (நற்றிணை-க உக) இது பாகன் கூற்று. ஒழிந்தன. கற்பியலுட் காண்க. ஆய்வுரை : இது, கற்பின்கண் கூற்று நிகழ்த்துதற்குரியாரைக் கூறுகின்றது. (இ.ஸ்) பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அன்பு நிறைந்த அறிவர், கண்டோர், பேணிப் பாதுகாக்கத் தகும் சிறப்புடைய பார்ப்பான் முதலாக முன்னர்ச் சொல்லப்பட்ட அறுவரும் ஆக இப்பன்னிருவரும் தொன்று தொட்டுவரும் நெறிமுறைமையினையுடைய கற்பு என்னும் ஒழுகலாற்றின்கண் கூற்று நிகழ்த்துதற்கு உரியராவர் எறு. ஆணம் நேயம்; அன்பு.