பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்உம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எrஅங் ஊரும் அயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுத வல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும். இாைம்பூர ைம் : என்-எனின். மேற்சொல்லப்பட்ட இருவகைக் கைகோளிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்). ஊரிலுள்ளாருஞ் சேரியிலுள்ளாருஞ் அயன் மனையுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினா லறிவாருந் தந்தையுந் தமையனும் இருவகைக் கைகோளினும் பட்ட தனையுட்கொண்டு பிறிதொன்றை யெடுத்துமொழியினல்லது பட்டாங்குக் கூறுதலின்மை: வலியுறுத்தத் தோன்றும்2 என்றவாறு, எனவே, வலியில்வழிச் சிறுபான்மை நிகழவும் பெறும்." “எந்தையும், நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்’ (அகம்,க உ} இது தந்தை யுட்கொண்டு கூறியது. பிறவுமன்ன. (க அக.) Gung mejarfu suk : (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட அறுவகையோருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறார் (எ-று.) இவை, களவிற்குங் கற்பிற்கும் பொது. கொண்டெடுத்து மொழியப்படுதலல்ல தென்பது இவர் கூற்றாகப் பிறர் சொல்லி னல்லது இவர்தாங் கூறாரென்றவாறு. அவை. 1. கொண்டெடுத்துமொழியப்படுதல் என்பதற்குத் தாம்சொல்லக்கருதி யதனைப் பட்டாங்கு வெளிப்படக்கூறாது அப்பொருள் குறிப்பிற்புலனாகப் பிறி தொன்றனையெடுத்துக் கூறுதல் என இளம்பூரணர் பொருள்கொண்டுள்ளார் என்பது இவ்வுரைப்பகுதியாற் புலனாம். 2. வலியுற்றுத் தோன்றும் ரா. இராகவையங்கார் பதிப்பிலுள்ளபாடம். 3. எனவே-பெறும் எனவரும் இத்தொடர், உரைக்கும் உதாரணத்திற்கும் தொடர்பற்ற நிலையில் இடையே கிடத்தலால் வலியுற்றுத்தோன்றும் என்னும் உரைப்பகுதிக்கு விளக்கமாக ஏடெழுதுவோாாற் பிற்காலத்திற் சேர்க்கப் பெற்றதெனக் கருதவேண்டி யுளது. 4. ஊர், அயல், சேரியோர், நோய்மருங்கறிநர், தந்தை, தன்னை என இங்கு எண்ணப்பட்ட அறுவரும் களவிலும் கற்பிலும் கூற்றுநிகழ்த்துவோராக இடம்பெறுதல் இல்லை. இவர்தம் கூற்றுக்கள் தோழி முதலிய பிறர்வாயிலாகக் கொண்டு எடுத்துக் கூறப்படுதல் உண்டு என்பதாம்.