பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

森》芝_母° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் முற்றத்தோன்றாது அறவே தோன்றாது. எனவே நற்றாய் தலவைனும் தலைவியும் அல்லாத செவிலி தோழி முதலியோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். ள அரு ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப, இாைம்பூரணம் : என்-எனின் கண்டோர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலியும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது என்றவாறு, எனவே, ஏனையோர் கேட்பக்கூறிற்றில்லை என்றவாறாம்2 (கஅரு) (இ-ள்) தலைமகனோடும் தலைமகளோடும் இடைச்சுரத்துக் கண்டோர் மொழிதல் (40) அறியப்பட்டது (எ-று). "ஒண்டொடி மாதர் கிழவன்’ எனவே அவ்விருவர் கூட்டத் துக்கண்ணுமன்றி அவ்விருவரோடும் தனித்துக் கூற்றில்ல்ை யென்றவாறு கண்டது என்ற மிகையான் இடைச்சுரத்துக் கண்டோர் செவிலிக்குரைப்பனவுங் கொள்க. அவை, "இளையண் மெல்லியண் மடந்தை யரிய சேய பெருங்கான் யாறே’ (சிற்றெட்டகம்) எனவும், 'அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேர்ந்தனை சென்மே” எனவும் வரும். 1. கண்டது-(உலகியலிற்) காணப்பட்டது. 2. கண்டோர் கூறுதல் காணப்பட்டது. எனவே கண்டோர்கூற்று தலைவன் தலைவியல்லாத ஏனையேர்ா கேட்ப நிகழ்தலில்லை என்பதாம். 8. ஒண்டொடி மாதர் கிழவன்' என்பதனை ஒருபெயராக்கி ஒளிதங்கிய தொடியினை யணிந்தாளாகிய தலைவிக் குரியனாகிய தலைவன்' எனப் பேராசிரியர் பொருள் கொண்டார் என்பது இதனுள் ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந்தோன்றக் கூறியது தலைமகனை' எனவரும் அவருரையாற் புலனாம். கிழவன் கிழத்தியொடு, என அவ்விருவரையும் இணைத்துக் கூறுதலால், அவ்விருவரும் ஒருங்கிருந்த கூட்டத்துக்கண் அவ்விருவரையும் நோக்கியல்லது கண்டோர் அவருள் ஒருவரை நோக்கித் தனித்துக்கூறுதல் இல்லை என்பதாம்,