பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாஅசு இன் இ.!ெ” நீதிநூல் வகையாற் கிளத்தலென்பது கிழத்தி தன் தமர் இடைச்சுரத்துக்குக் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் வழக்கியல் கூறுதலுமுரியனென்பது. வழக்கிய லாணை யென்றதனான் நீதிநூல் விதிபிறழக்கூறின் அஃது இராக்கதம் போன்று காட்டுமென்பது. உம்மையாற் கிழத்தியோடு வழக்கிய லாணையானன்றி மருட்டிக்கூறவும் பெறு மென்பது. "அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகவிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே' (நற்றிணை :9) என்பதனுள், வருந்தா தேகுமதி யெனவே, வழிபடு தெய்வங் கட்கண்டால் விடுவார் இல்லாததுபோல நின்னை விடுதல் எனக்கு அறனன்றெனக்கூறி மெல்லெனச் செல்கவென மருட்டிக் கூறியவாறு காண்க. (ககூ ச) ড়ে ঔঞ্জ কে গুঞ্জ কেf" : : இதுவுங் கூற்றுவிகற்பங் கூறுகின்றது. (இ-ஸ்). இடைச்சுரத்தி லுடன்போய்க் கிழத்தியொடுங் கிழவன் நீதி நூல்வழியாற் கிளத்தற்கும் உரியன். எறு 1. வழக்கியல் நீதிநூல். தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுந்தலைவன். இடைச்சுரத்தே தலைமகளுடைய சுற்றத்தார் இடைமறித்தவழி நீதிநூல்விதிபிறழக்கூறின் அச்செயல் இராக்கத மணமெனப்படு மாதலின் இடைமறித்தவழித் தலைமகளை நீதிநூல் விதியுடன் உரையாடி அழைத்துச். செல்வன் என்பதாம், வழக்கிய வாணையிற் கிளத்தற்கும் உரியன்' என்ற வும். மையால் அங்ங்னம் ஆணைகூறாது தலைமகளைத் தன் அன்பின் திறத்தால் வியந்து மருளும்படி இன்னுரை பகர்ந்து அழைத்துச் செல்லுதற்கும் உரியன் என்பதாம்,